கேட்டாலோனியா தலைவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது!

278 0

தனிநாடு பிரகடணம் செய்த கேட்டாலோனியா தலைவர் பூட்ஜியமோண்ட், சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்பெயின் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கேட்டலோனியா, தனிநாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த மாதம் 1-ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனிநாடாக கேட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து, கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றதாக கேட்டாலோனியா பாராளுமன்றம் அறிவித்தது. பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்புக்கு பின்னர் இந்த அறிப்பு வெளியானது.

கேட்டாலோனியா சுதந்திர பிரகடணம் செய்த சில மணிநேரங்களில் பாராளுமன்றத்தை கலைத்து, நேரடி நிர்வாகம் அமல்படுத்தப்படுவதாக ஸ்பெயின் அரசு அறிவித்தது. கலைக்கப்பட்ட கேட்டாலோனியா பாராளுமன்றத்திற்கு டிசம்பர் மாதம் மறுதேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பிரிவினைவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பூட்ஜியமோண்ட் உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஸ்பெயின் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், பூட்ஜியமோண்ட் தற்போது ஜெர்மனியில் இருப்பதால் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பூட்ஜியமோண்ட் உள்பட 5 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Leave a comment