சென்னையில் கடந்த சில நாட்களாக காய்கறி, பழங்கள் விலை உயர்ந்து வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர்களில் இருந்து பழங்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு பழங்களின் விலை கிலோவுக்கு வருமாறு:-
கற்பூரவள்ளி – ரூ.80
ஏலக்கி – ரூ.90
நேந்திரம் – ரூ.100
செவ்வாழை – ரூ.100
மலைவாழை – ரூ.120
பூவன்பழம் – ரூ.60
பச்சைபழம்
(மோரீஸ்) – ரூ.50
ஆப்பிள் – ரூ.150
வாஷிங்டன் ஆப்பிள் – ரூ.180
காஷ்மீர் ஆப்பிள் – ரூ.120
மாதுளம்பழம் – ரூ.180
கொய்யாப்பழம் – ரூ.90
சாத்துக்குடி – ரூ.60
கமலா ஆரஞ்சு – ரூ.60
பன்னீர் திராட்சை – ரூ.100
ஆஸ்திரேலியன் திராட்சை – ரூ.300
இதே போல் காய்கறிகள் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. காய்கறி விலை கிலோவுக்கு வருமாறு:-
தக்காளி – ரூ.60
கத்தரிக்காய் – ரூ.80
பெரியவெங்காயம் – ரூ.50
சின்னவெங்காயம் – ரூ.140
உருளைகிழங்கு – ரூ.40
கேரட், பீன்ஸ், அவரை – ரூ.100
முட்டைகோஸ் – ரூ.70
பீட்ரூட், முள்ளங்கி – ரூ.70
பீர்க்கங்காய், பாகற்காய் – ரூ.80
பச்சை பட்டாணி – ரூ.200
குடை மிளகாய் – ரூ.120
முருங்கைக்காய் – ரூ.120
விலை உயர்வு பற்றி கோயம்பேடு வியாபாரிகள் கூறியதாவது:-
வாழைப்பழங்கள் திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம் மாவட்டங்களில் இருந்து அதிக அளவு வருவது வழக்கம்.

தற்போது பருவமழை தொடங்கி விட்டதால் வயல்வெளியில் இருந்து வாழைக்காயை லாரியில் ஏற்றி இறக்க கூலி ஆட்கள் உடனே கிடைப்பதில்லை. 2 நாட்களுக்கு ஒருமுறைதான் லோடு ஏற்றப்படுகிறது. இதனால் செலவு அதிகமாவதால் விலை கூடுதலாகி விட்டது.
மழை காலத்தில் காய்கறி, பழங்கள் நிறைய அழுகி வீணாகி விடுவதால் நஷ்டத்தை தவிர்க்க அடக்க விலையை விட சற்று கூடுதல் விலை வைத்து விற்றால்தான் எங்களுக்கு கட்டுப்படியாகும். அதனால் தான் விலை அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

