ஊர்காவற்றுறை சென் அன்ரனீஸ் கல்லூரியின் பரிசளிப்புவிழா

389 0

ஊர்காவற்றுறை சென் அன்ரனீஸ் கல்லூரியின் பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
நேற்று (31.10.2017) பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியில் விளையாட்டு நிகழ்வுகளில் பதக்கங்களை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.
பாடசாலை அதிபர் பாதர் டேவிட் எட்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.​

Leave a comment