அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தொடர்பு குறித்து, ட்ரம்பின் ஆலோசகர் ஒருவர் பொய்க்கூறியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆதரவுடனேயே டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையின் போது, டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் கால ஆலோசகரான ஜோர்ஜ் பபடோபோலஸ், உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவரே ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

