இடைக்கால அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம்

280 0

அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் தற்சமயம் இடம்பெறுகின்றது.

இன்று முற்பகல் ஆரம்பமான விவாதம் மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.

உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பான அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை கடந்த 21ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அது தொடர்பான விவாதமே தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது.

இதனிடையே, அரசியல் அமைப்பு சபையின் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்கட்சி இன்று முற்பகல் அடையாள எதிர்ப்பொன்றை மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியில் முற்பகல் 10 மணியளவில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினரால் அடையாள எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக நாடாளுமன்ற நுழைபு வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

எனினும் சிறிது நேரத்தின் பின்னர் நிலமை வழமைக்கு கொண்டுவரப்பட்டது.

வடமாகாண மரநடுகை மாதம் எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையி ல் மன்னார் மாவட்டம் திருக்கேதீஸ்வரம்- சிவபுரம் கிராமத்தில் எதிர்வரும் 1ம் திகதி மாகாண மரநடுகை மாதம் ஆரம்பிக்கப்படும் என வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் கூறியுள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக இன்று மாகாண விவசாய அமைச்சு அலுவலகத்தில் நடைபெ ற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவா று கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடமாகாண விவசாய அமைச்சினால் வருடாந்தம் அனுட்டிக்கப்படும் மரநடுகை மாதம் எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை நடைபெ றவுள்ளது.

இம் மாதத்தில் மாகாண விவசாய அமைச்சினால் பல்வேறு மரநடுகை செயற்றிட்டங்கள் நi டபெறவுள்ளது.

மாகாண மரநடுகை மாதத்தின் தொடக்க நிகழ்வு எதிர்வரும் 1ம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வரம்- சிவபுரம் கிராமத்தில் நடைபெறும்.

அதனை தொர்ந்து வடமாகாணத்தில் உள்ள 25 பிரதே ச செயலர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலர் பிரிவில் இருந்து தலா ஒவ்வொரு கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கு தலா 5 மரக்கன்றுகள் படி வழங்கப்படும்.

அதேபோல் வடமாகாண அரச திணைக்களங்களுக்கும், கோரிக்கை விடுக்கப்பட்டால் தனியார் நிறுவ னங்களுக்கும் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்படும்.

இதன்படி பழ மரக்கன்றுகள், நிழல் தரு மரக்க ன்றுகள் வழங்கப்படும். அதேபோல் பாடசாலை மாணவர்களுக்கிடையில் மரநடுகை மாதம் தொடர்பாக கவிதை போட்டிகள், கட்டுரை போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இந்த போட்டிகள் கீழ் பிரிவு, மத்தி ய பிரிவு என 2 பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

Leave a comment