‘சீன மண்ணை பாதுகாத்திடுங்கள்’ – கால்நடை வளர்ப்போருக்கு ஜின்பிங் வேண்டுகோள்

322 0

அருணாசல பிரதேச எல்லையில் ‘சீன மண்ணை பாதுகாத்திடுங்கள்’ என சீனாவின் அதிபர் ஜின்பிங் கால்நடை வளர்ப்போருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே 4,057 கிலோ மீட்டர் நீளத்துக்கு எல்லைப் பகுதி உள்ளது. இதில் அருணாசலபிரதேசத்தில் உள்ள 2,000 கி.மீ. பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதை தெற்கு திபெத் என்றும் சீனா குறிப்பிட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவின் அதிபராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜின்பிங்கை இமயமலையின் தென்மேற்கு சீனாவின் லுன்சே மாவட்டத்தில் வசிக்கும் கால்நடை வளர்ப்போர் பிரதிநிதிகள் சந்தித்தனர்.

அப்போது அவர்களிடையே பேசிய ஜின்பிங், “நீங்கள் வசிக்கும் பகுதியில் சீன மண்ணை பாதுகாக்கவேண்டியது உங்கள் கடமை ஆகும். அதேபோல் உங்கள் பகுதியின் வளர்ச்சியையும் மேம்படுத்தவேண்டும். உங்கள் பகுதியில் அமைதி நிலவவில்லை என்றால் எல்லையோரத்தில் பல லட்சம் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. நீங்கள் விசுவாசத்துடன் எல்லையை பாதுகாத்து வருவதற்கும், அதற்கான பங்களிப்புக்கும் நன்றி” என்றார்.

Leave a comment