அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல்!

671 0

blogger-image--1357359599அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் அணுமூல கூறுகளை விநியோகிக்கும் நாடுகளின் குழுமத்தில் இந்தியாவை இணைப்பது தொடர்பில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குழுமத்தில் 48 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இதில் அங்கத்துவத்தை பெறுவதற்கு இந்தியாவும் முயற்சி எடுத்து வருகிறது. இந்தநிலையில், தென்கொரிய தலைநகர் சியோலில் இடம்பெறும் அணுமூல கூறு விநியோக குழுமத்தின் மாநாட்டில் வைத்து அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு வெளியிட்டிருந்தது. எவ்வாறாயினும், சீனாவின் அரச ஊடகம் தொடர்பில்லாத வகையில் இந்த குழுமத்தில் இந்தியாவுக்கு பதிலாக பாகிஸ்தானை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகையின் பேச்சாளர், ஜோஸ் ஏர்னஸ்ட் இந்த குழுமத்தில் இந்தியா அங்கத்தும் பெறுவதை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நேற்றைய தினம் சீனாவுக்கான அவசர விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பியிருந்தார். இதனையடுத்து, கருத்து வெளியிட்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அணு மூலகூறு விநியோக குழுமத்தியில் இந்தியா அங்கத்தும் பெறுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்காது என கூறியிருந்தமை குறிப்பிடதக்கது.

Leave a comment