அநுராதபுரம் – மஹபுலங்குளம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் லொறியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளான லொறி, மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

