சீன அதிபராக ஜி ஜின்பிங் இன்று 2-வது தடவையாக பதவி ஏற்றார். அவருடன் பிரதமர் லீ கெகியாங் மற்றும் 5 புதிய பொலிட் பீரோ கமிட்டியும் பொறுப்பு ஏற்றது.
சீன அதிபராக ஜி ஜின்பிங் (64). கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பதவி ஏற்றார். இவர் சீன மக்களின் ஆதரவு பெற்ற தலைவராக திகழ்கிறார். இந்த நிலையில் அவர் சீனாவில் மேலும் 5 ஆண்டுகள் அதிபராக பதவியில் தொடர ஒப்புதல் வழங்கப்பட்டது.
மேலும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து ஜி ஜின்பிங்கின் பெயரையும், சித்தாந்தமும், சேர்க்கப்பட்டது. சீன கம்யூனிஸ்டு மாநாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதை தொடர்ந்து இன்று அவர் 2-வது தடவையாக சீன அதிபராக பதவி ஏற்றார். அவருடன் பிரதமர் லீ கெகியாங் மற்றும் 5 புதிய பொலிட்பீரோ கமிட்டியும் பொறுப்பு ஏற்றது.

இந்த நிகழ்ச்சி பெய்ஜிங்கில் உள்ள மக்கள் பெருமன்றத்தில் நடந்தது. முன்னதாக அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் மற்றும் 5 புதிய பொலிட் பீரோ நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக நடந்து வந்தனர்.
2-வது தடவை அதிபராக பதவி ஏற்ற பின் ஜி ஜின்பிங் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.
சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் சாசனத்தில் ஜின்பிங்கின் பெயரும் அவரது சித்தாந்தமும் இடம் பெற்று விட்டதால் அவர் கட்சியின் நிறுவனராக மாசேதுங், டெங் ஜியோவோபிங் வரிசையில் இடம் பிடித்துவிட்டார்.

