20 மாடியில் உருவாகும் சென்டிரல் சதுக்கம்: ரூ.400 கோடி செலவில் மெட்ரோ ரெயில் நிறுவனம் கட்டுகிறது

443 0

சென்டிரலில் 20 அடுக்குகள் கொண்ட இரட்டை கோபுர கட்டிடம், சென்டிரல் ஸ்கொயர் (சென்ட்ரல் சதுக்கம்) என்ற பெயரில் கட்ட மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் நிறுவனம் சென்னையில் விரைவு போக்கு வரத்துக்கான மெட்ரோ ரெயில் பாதைகளை அமைத்து வருகிறது.

இதில் 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் நேரு பூங்கா- கோயம்பேடு -ஆலந்தூர் -விமான நிலையம் இடையேயும், சின்னமலை- ஆலந்தூர் -விமான நிலையம் இடையேயும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்டிரலில் பூமிக்கடியில் மிகப்பெரிய மெட்ரோ ரெயில் ஜங்‌ஷன் அமைக்கப்படுகிறது. அண்ணா சாலையில் இருந்து வரும் மெட்ரோ ரெயிலும், கோயம்பேட்டில் இருந்து வரும் மெட்ரோ ரெயிலும், வண்ணாரப் பேட்டையில் இருந்து வரும் மெட்ரோ ரெயிலும் சென்டிரலில் இணைகிறது. அங்கு பூமிக்கு அடியில் பிரமாண்ட இணைப்பு ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

இதுதவிர பூங்கா ரெயில் நிலையம், சென்டிரல் புறநகர் ரெயில் நிலையம் இடையேயும் பயணிகள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதையும் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் முடிவடையும்போது பூமிக்கடியில் குட்டிநகரம்போல் பிரமிக்க வைக்கும்.

மேலும் சென்டிரலில் 20 அடுக்குகள் கொண்ட இரட்டை கோபுர கட்டிடமும், சென்டிரல் ஸ்கொயர் (சென்ட்ரல் சதுக்கம்) என்ற பெயரில் கட்ட மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்ட மிட்டுள்ளது. இதற்கான கட்டிட வடிவமைப்பு தயார் செய்யப்பட்டு சி.எம்.டி.ஏ. ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

 

Leave a comment