தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பி.எஸ். மரியாதை

Posted by - October 30, 2017

குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள் நுழைய அனுமதி

Posted by - October 30, 2017

சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள் நுழைய அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்பின் சீன பயணம் காரணமாக அமெரிக்காவுக்கான சீன தூதர் ஓய்வு பெறுவது தள்ளிவைப்பு

Posted by - October 30, 2017

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் அமெரிக்காவுக்கான சீன தூதர் ஓய்வு பெறுவது தள்ளிவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை உள்பட தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும்

Posted by - October 30, 2017

வங்கக்கடல் பகுதியில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, 2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்தார்.

பி.எட். படிப்பில் தமிழ் பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - October 30, 2017

தமிழுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட்டு, பி.எட். படிப்பில் தமிழ் பாடத்தை மீண்டும் சேர்க்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முக்கிய முடிவு

Posted by - October 30, 2017

இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இன்று (திங்கட் கிழமை) முக்கிய முடிவு அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

கனடாவில் திடீரென காணாமல் போன தமிழ் மூதாட்டி!

Posted by - October 30, 2017

கனடாவில் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்த தமிழ் மூதாட்டி ஒருவர் இன்று(30) காலை மீட்கப்பட்டுள்ளார்.

மீடியாகொட பகுதியில் விபத்து – இருவர் பலி, 14 பேர் காயம்

Posted by - October 30, 2017

காலி – மீடியாகொட பகுதியில் சிற்றுர்ந்து ஒன்று தொடரூந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொரூந்தில் குறித்த சிற்றுர்ந்து மோதியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். மரணசடங்கொன்றிற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெண் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கியது சவுதி அரேபியா

Posted by - October 30, 2017

ஒரு பெண் ரோபோவுக்கு சவுதிஅரேபிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. அந்த ரோபோவின் பெயர் சோபியா, இதை ஹொங்கொங் நிறுவனமான ‘ஹன்சன் ரோபோடிக்’ நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன் வடிவமைத்துள்ளார். இது பெண் போன்று மிக இனிமையாக பேசுகிறது. கேட்கும் கேள்விக்கு மனிதர்கள் போன்று சரமாரியாக பதில் அளிக்கிறது, இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற தோற்றத்தில் உள்ளது. சவுதிஅரேபியா அரசின் குடியுரிமை பெற்ற சோபியா ரோபோ வழங்கிய செவ்வியில்.. என்னை ஒரு தனித்தவத் தன்மையுடன்

ஷேக் ஹசீனா கொலை முயற்சி – 11 பேருக்கு 20 வருட சிறை தண்டனை

Posted by - October 30, 2017

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை கடந்த 28 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று தொடர்பில் 11 பேருக்கு 20 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின்  தந்தை என்றழைக்கப்பட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு பின்னர் அவரால் வழிநடத்தப்பட்ட அவாமி லீக் கட்சியின் தலைவராக ஷேக் ஹசினா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஷேக் ஹசினாவை கொலை செய்வதற்கான 19 முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.