சிறந்த சமய பின்னணியிலேயே சிறந்த சமூகமொன்றினை கட்டியெழுப்ப முடியும் –மைத்ரிபால சிறிசேன
நாட்டில் சிறந்த சமயப் பின்னணியினை ஏற்படுத்துவதன் ஊடாகவே விழுமியப் பண்புகளையுடைய சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (30) மாத்தளை, மில்லவான மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் பௌத்த சங்க சபையின் 14 ஆவது வருடாந்த சம்மேளனத்தின் நிறைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். உலகம் பூராகவும் காணப்படும் தேரவாத, மகாயான, தந்திரயான, வஜ்ரயான மற்றும் சென் பௌத்த மதப் பிரிவுகளை சேர்ந்த இளம் பிக்குமார்

