அரசு ஸ்டேடியங்களில் வாக்கிங் போக, விளையாட இனி கட்டணம் வசூல்
அரசு ஸ்டேடியங்களை பராமரிப்பு செய்வதற்காக நடைப்பயிற்சி மற்றும் விளையாட வரும் பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்று முடிவு எடுத்து நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.
அரசு ஸ்டேடியங்களை பராமரிப்பு செய்வதற்காக நடைப்பயிற்சி மற்றும் விளையாட வரும் பொது மக்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என்று முடிவு எடுத்து நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை வலுத்துள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புபணியை மேற்கொள்ள 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குட்கா விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி.யின் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தேவைப்படும் கூடுதல் நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலானது தமிழின அழிப்பின் நீட்சியாகும். தமிழர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போடும் இச்சட்டத்திருத்தத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். பனை, தென்னை மற்றும் கித்துள் தவிர்ந்த வேறு எந்த மரத்தில் இருந்தும் கள்ளுச் சீவுவது, எடுப்பது, இறக்குவதனை தடைசெய்யும் வகையில் ஏற்கனவே இருந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் கித்துள் தவிர்ந்த வேறு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான தொடர்பு குறித்து, ட்ரம்பின் ஆலோசகர் ஒருவர் பொய்க்கூறியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஆதரவுடனேயே டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் போது, டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் கால ஆலோசகரான ஜோர்ஜ் பபடோபோலஸ், உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரே ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கண்டி – அங்கும்புர – ரம்புக்கெல பிரதேசத்தில் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் இனந்தெரியாத சிலரால், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். தமது பணியினை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே நேற்றிரவு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த உப காவல்துறை பரிசோதகர் அங்கும்புர மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சம்பவத்திற்காக காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், தாக்குதல் மேற்கொண்டவர்களும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்களது சொந்த இடங்களில் குடியேறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று நோர்வே வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் தோர்ப்ஜன் கோஸ்டாட்செதர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார். மக்கள் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதை உறுதி செய்வது கட்டாயமாகும். அத்துடன் அவர்களின் வாழ்க்கை தங்களின் சொந்த இடங்களிலேயே மீள நிலைநிறுத்தப்பட வேண்டும். இதன் காரணமாகவே காணிகள் விடுவிக்கப்பட ஆரம்பித்ததில் இருந்து நோர்வே அரசாங்கம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்கி வருகிறது என்று
எதிர் கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக, சபாநாயகரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். உத்தேச அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் தமக்கு உரையாற்றுவதற்கு, சம்பந்தன் இடம்தர மறுத்துள்ளார். இதன் மூலம் தமது நாடாளுமன்ற சிறப்புரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தமது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.