மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தர்(காணொளி)
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடமையாற்றிவந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகத்தரின் சடலம் இன்று நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மகிலூரைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தரான சோமசுந்தரம் விக்னேஸ்வரனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மரணமடைந்தவரின் உறவினர்களினால் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி

