பன்னாட்டு கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை ; பாகிஸ்தான், இந்தியாவையடுத்து பாரிய சீன போர்கப்பல் வருகை
இந்து சமூத்திரத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை மாறியுள்ளது. அமெரிக்கா , இந்தியா , பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவின் பாரிய போர் கப்பல் ஒன்று இவ்வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளது. இந்த போர் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக கடற்படை உறுதிப்படுத்தியது. கடந்த இரண்டு வாரத்திலிருந்து இன்றுவரையில் இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், அமெரிக்கா , இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் போர்க்கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்டன. இன்று பாகிஸ்தானின் பி எஸ்

