அரச நிறுவனங்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மொழி அலுவலர்கள் ஆயிரம்பேரை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விண்ணப்பதாரிகள் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழியில் திறமைச் சித்தி பெற்றிருப்பதுடன், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் சாதாரண சித்தியேனும் பெற்றிருக்க வேண்டும். அதேநேரம், உயர் தரத்தில் ஏதாவது ஒரு பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும். இந்தத் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள ஆயிரம் பேருக்கு ஜனவரியில் நியமனம்