4 கோடி ரூபா பெறுமதியான போதை பொருள் கடத்தல்

Posted by - November 9, 2017

சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 4 கோடி ரூபா இந்திய பெறுமதியுடனான ஒருவகை போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து இலங்கைக்கு புறப்படவிருந்த வானூர்தியிலேயே  குறித்த போதைப்பொருளை கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைதானவர் தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட போதைப்பொருள் எவ்வாகையானது என்பது தொடர்பில் தற்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழக அதிகாரிகளை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இரண்டு மண்சரிவு – 6 பேர் காயம் 

Posted by - November 9, 2017

ஹப்புத்தளை ஹல்துமுல்ல – தடயம்பெல பிரதேசத்தில் குடியிருப்பு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த குடியிருப்பில் இருந்த தாய், தந்தை மற்றும் மகள் காயமடைந்து தியதலாவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை மோசமானதாக இருப்பதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நேற்றிரவு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்த சிறுமி 9 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. கடும் மழையின் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தில் குடியிருப்புக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இறாகம – கல்வலவத்த – கென்தலியத்த

வடக்கு கிழக்கு மாவட்டங்களே வறுமையில் முன்னிலையில்

Posted by - November 9, 2017

வடக்கு கிழக்கில் உள்ள 5 மாவட்டங்களே இலங்கையில் வறுமை நிலையில் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர்.ஸ்ரீபத்மநாதன் இதனைத் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமை ஒழிப்பு செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுவரை வறுமைக்கோட்டுக்குள் இருந்த மொனறாகலை மற்றும் மன்னார் மாவட்டங்கள் அதிலிருந்து விடுபட்டுள்ளன. அதேவேளை திருகோணமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் வறுமைப் பட்டியலுக்குள் நுழைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யானைத் தந்தத்துடன் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது!

Posted by - November 9, 2017

மிஹிந்தலை – மாத்தளை சந்திக்கு அருகில், யானைத் தந்தம் வைத்திருந்ததாக கூறப்படும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவில் ஹோபோக்கன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட சீக்கியர்

Posted by - November 9, 2017

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தின் ஹோபோக்கன் நகர மேயராக சீக்கியரான ரவீந்தர் பல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கொலம்பியா நாட்டில் ஒரே இடத்தில் ரூ.22 ஆயிரம் கோடி போதை மருந்து பறிமுதல்

Posted by - November 9, 2017

கொலம்பியா நாட்டில் ஆண்டியோகியா என்ற இடத்தில் வாழைத்தோட்டம் ஒன்றில் புதைத்து வைத்து இருந்த ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

எந்த தாக்குதலையும் சந்திக்க தயார்: சவுதிஅரேபியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

Posted by - November 9, 2017

சவுதி அரேபியா மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. அவர்கள் தாக்குதல் நடத்தினால் அதை சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என ஈரான் அதிபர் ஹசன்ரவுகானி கூறியுள்ளார்.

பிலிப்பைன்சில் முன்னாள் அதிபர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு

Posted by - November 9, 2017

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெனிக்கோ அகினோ மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யப்பட்டிருப்பதாக விசாரணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்: சிரியா இணைய தயார்!

Posted by - November 9, 2017

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் சிரியா கையெழுத்திட தயாராக இருப்பதாக கூறியுள்ளதையடுத்து அமெரிக்கா மட்டும் தனிமைபடுத்தப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம்

Posted by - November 9, 2017

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் வவுனியா கோயில்குளத்தில் நேற்று (08.11.2017) புதன்கிழமை முற்பகல் 11மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 2.00 மணிவரையில் நடைபெற்றது. இதில் நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல், அரசியலமைப்பு சம்பந்தமான விவகாரங்கள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தற்போது இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்பன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், அரசியலமைப்பு தொடர்பிலான இப்போதைய நிலைமைகளையும், இடைக்கால அறிக்கையயும்