வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவு யாழ்ப்பாணத்தில் இம்மாதம் திறந்துவைக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரவித்துள்ளார். யாழ்ப்பாண கொன்சியூலர் பிரிவு இம்மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்த்தில் திறந்துவைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண கொன்சியூலர் அலுவலகத்தை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்துவைக்கப்படவுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் கோகுல ரங்கன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். அலுவலக திறப்பு விழா நிகழ்விற்கு வடக்குக் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் அழைக்கப்பட இருப்பதாகவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்படவுள்ள