மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும்- முஸ்லிம் அமைச்சர்கள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற வில்பத்து விவகாரம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் கலந்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், புத்திஜீவிகளும் இதனை வலியுறுத்தியுள்ளனர். வில்பத்து விவகாரம் உட்பட முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை உடனடியாக பேசித் தீர்க்க ஜனாதிபதி,

