கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 12, 2017

கேப்பாபுலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இன்று காலை இந்த ஆர்பாட்;டம் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்கா முன்றலில் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல பொது அமைப்புகள்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயாவின் பெயர் நீக்கம்

Posted by - February 12, 2017

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவர் மரணமடைந்த நிலையில் இவர் இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே சசிகலா, இளவரசி மற்றும் சுதாகர் ஆகியோர் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை மறுதினம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவிக்க

இன வாத கருத்துக்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் – லக்ஸ்மன் கிரியல்ல

Posted by - February 12, 2017

இன வாத கருத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனை குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார். இன்றும் பலர் இனவாதத்தை தூண்டி மீண்டும் யுத்தம் ஒன்றுக்கு இட்டுச் செல்ல முனைகின்றனர். இதுகுறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என கோருகின்றோம். ஐக்கிய தேசிய கட்சி சிங்கள பௌத்தர்களை காப்பது போல் வேறு மதத்தினரையும் இனத்தவர்களையும் பாதுகாக்கும். நாட்டில்

புதிய அரசியல் அமைப்புக்கான யோசனை என்பது பொய் – மஹிந்த அணி

Posted by - February 12, 2017

அரசியல் அமைப்பு சீர்திருத்த யோசனை பெற்றுக்கொண்டு புதிய அரசியல் அமைப்பு தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தயாரித்து நிறைவுப்பெற்றுள்ளது. ஆலோசனை பெறுகின்றோம் என்பது பொய்யான விடயமே. புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் புலம்பெயர்ந்தவர்களை திருப்திப்படுத்தும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

”மிஸ்டுகோல்” திட்டம் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பு

Posted by - February 12, 2017

அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மேற்கொண்ட ”மிஸ்டுகோல்” திட்டம் மூலம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு அதிகரித்திருப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்சியைக் கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சசிகலாவிற்கு ஆதரவாக 94 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், கிளைக் கழக தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பொது மக்கள் மத்தியில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இருவரில் யாருக்கு

அபிவிருத்தி திட்டங்களுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றபோது, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது – மஹிந்த

Posted by - February 12, 2017

அபிவிருத்தி திட்டங்களுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுகின்றபோது, மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலிஅத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்ற போதும், புதிதாக அதிவேக நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படுகின்ற போதும் தொடருந்துகள் கொண்டுவரப்படுகின்ற போதும் மக்கள் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களுக்கு காணிகளின் பாகங்கள் சுவீகரிக்கப்பட்டாலும் ஏனைய பாகத்திற்கு அதனை விட பன்மடங்கு பெறுதி அதிகரிக்கப்படுவதாக

ஈகத்தின் சுடரே!

Posted by - February 12, 2017

மக்களுக்காக எரிதனலேந்தி மண்ணிலே சாய்ந்த மைந்தனே முருகா துன்பமே சூழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வினை மாற்ற தீயினைச் சூடிப் போரினைத் தொடுத்து பொன்னெழுத்துகள் சூடி மண்ணிலே சாய்ந்தாய்! தாய் மண்ணிலே இன்றும் துன்பங்கள் சூழத் துயரங்கள் ஆளத் துடிக்கிறார் மக்கள் வடிக்கிறார் உதிரம் உதிரத்தால் உறைந்த உயிரெனும் தாய்நிலம் அடிமையாய் இன்னும் அழிகின்ற நிலையாய் தொடர்வதும் ஏனோ! ஈகங்களாலே ஈன்ற எம் தேசம் வேடங்களாலே வேற்றவராள மாற்றான் போன்று மகுடிக்கு ஆடும் பாம்புகளான தலைமைகளாலே விடையென்று வருமென்று

தமிழர் தலைமைத்துவங்களே சமஷ்டியை வேண்டாம் என மறுத்தனர் – மனோகணேசன்

Posted by - February 12, 2017

இலங்கையில் ஆரம்பகால தமிழர் தலைமைத்துவங்களே சமஷ்டியை வேண்டாம் என மறுத்ததாக அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளவத்தையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 1987ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, வடக்கு கிழக்கை இணைத்து தந்த தீர்வை தமிழ் தலைமைகள் புறக்கணித்தனர். 2000ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க கொண்டுவந்த தீர்வையும் அவர்கள் புறக்கணித்தனர். இந்த நிலையில் அந்த 2 தீர்வுகளும் இன்று தமிழர்கள் எதிர்ப்பார்கும் தீர்வுகளை

போலி நாணய தாள்கள் அச்சிடும் இடம் முற்றுகை

Posted by - February 12, 2017

ஹொரணை – கொடிகம்கொட பிரதேசத்தில் போலி நாணய தாள்கள் அச்சிடும் இடம் ஒன்று முற்றுகை இடப்பட்டது. இதன்போது 28 லட்சத்துக்கும் அதிக பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர். இன்று முற்பகல் இந்த முற்றுகை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காவற்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை – வியாழேந்திரன்

Posted by - February 12, 2017

நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இன்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது வியாழேந்திரன் இதனை தெரிவித்தார். ஜனாதிபதி வரை கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினை எத்தி வைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதது கவலையளிப்பதாக வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.