காதலர் தின கொண்டாட்டத்திற்கு அதிரடியாக தடை விதித்த நீதிமன்றம்

Posted by - February 14, 2017

இஸ்லாமிய மதத்திற்கு எதிராக உள்ளதாக கூறி, பாகிஸ்தான் முழுவதும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதித்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகமெங்கும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதிகாதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் வாகீத் என்ற நபர், காதலர் தினக் கொண்டாட்டங்களை பாகிஸ்தானில் தடை செய்ய வேண்டும் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், இஸ்லாமியக் கலாச்சாரத்தில் காதலர் தினக் கொண்டாட்டங்கள்

சைட்டம் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவது 6 மாத காலம் இடைநிறுத்தம்

Posted by - February 14, 2017

மாலபே தனியார் மருத்துவக்க கல்லூரி தொடர்பாக மருத்துவ சங்கம் முன்வைத்த பரிந்துரைகளுக்கு அனுமதி வழங்க அடுத்த வாரத்துக்குள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அரச மருத்துவ அதிகரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அந்தச் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தமது பொறுப்பை நிறைவேற்ற சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தவறியுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, மாலபே தனியார் மருத்துவ

மெக்சிகோவில் டிரம்புக்கு எதிராக மக்கள் போராட்டம்

Posted by - February 14, 2017

எல்லையில் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மெக்சிகோவில் டிரம்புக்கு எதிராக 1 லட்சம் பேர் போராட்டம் நடத்தினார்கள். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்து குடியேறுபவர்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருந்தார். அதை நடை முறைப்படுத்த அதிவிரைவு நடவடிக்கை மேற் கொண்டுள்ளார். எல்லையின் சில பகுதிகளில் தற்காலிகசுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அதே போன்று 1300 கி.மீட்டர் நீளத்துக்கு நிரந்தர சுவர் கட்ட தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு மெக்சிகோவில் கடும்

பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயம் கோரி ஆசிரியர்கள் போராட்டம்

Posted by - February 14, 2017

வடமாகாண கல்வி அமைச்சினால் பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியாயம் கோரி, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. வடமாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது இலங்கை ஆசிரியர்கள் சங்கம் மற்றும் வடமாகாண ஆசிரியர்கள் சங்கம் என்பன இதற்கான ஒழுங்கை மேற்கொண்டிருந்தன. கடந்த வருடம் கஷ்ட பிரதேசங்களுக்கான ஐந்தாண்டு கால கடமைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்கள், இடமாற்றம் கோரி கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது ஒழுக்கவீனமாக நடந்து கொண்டதாக தெரிவித்து மூன்று ஆசிரியர்கள் வடமாகாண

கேப்பாபுலவு – புலவுகுடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடிதம்

Posted by - February 14, 2017

கேப்பாபுலவு – புலவுகுடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, வடமாகாண சபையினால் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் வடமாகாண ஆளுனர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வடமாகாண சபை உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது காணிகளை மீளத்தருமாறு கோரி கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரால் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைககள் நிறுவக மாணவர்கள் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று

அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுகிறது – மகிந்த

Posted by - February 14, 2017

அரசாங்கம் தேர்தல்களுக்கு அஞ்சுவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் நலன் விசாரிக்க வெலிகட சிறைச்சாலைக்கு முன்னாள் ஜனாதிபதி சென்றிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருந்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்திருந்தார்.

நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு முன்னாள் அரசாங்கமே பொறுப்பு – ரவி

Posted by - February 14, 2017

நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு முன்னாள் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளார். கோப் குழுவினால் நட்டமடைந்து வரும் அரச நிறுவனங்கள் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில்வழங்கிய அமைச்சர், அரச நிறுவனங்களை கடந்த அரசாங்கம் முறையாக நடத்த தவறியதாலேயே அவை நட்டமடையும் நிலைக்கு சென்றதாக கூறியுள்ளார்.

சந்தையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு

Posted by - February 14, 2017

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளதை தொடர்ந்து சந்தையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள நாளைய தினம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக மரதகஹமுல அரிசி உற்பத்தி சங்கத்தின் தலைவர் பீ.கே.ரஞ்சித் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மாற்றுவதற்கு எவ்வித அவசியம் இல்லை என பொலன்னறுவை அரிசி உற்பத்தியாளர்கள் தெரிவத்துள்ளனர். மரதகஹமுல அரிசி உற்பத்தியாளரக்ள் சந்தைக்கு அரிசியினை விநியோகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண் லென்ஸ்களுக்கான விலை குறைப்பு

Posted by - February 14, 2017

கண் லென்ஸ்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிக்கையை உடனடியாக அச்சிட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மக்களுக்கு குறைந்த விலையில் கண் லென்ஸ்களை பெற்றுக்கொடுத்தல் இதன் நோக்கமாகும். தற்போது காணப்படும் விலையை விட நூற்றுக்கு 50 சதவீதத்தில் கண் லென்ஸின் விலை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காவற்துறை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு

Posted by - February 14, 2017

காலி – நாகொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் 37 வயதுடைய நபரொருவர் காவற்துறையினர் தாக்கிய காரணத்தால் உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். உயிரிழந்த நபரின் இறுதி கிரியைகள் எல்பிடிய – கஹதுவ – கடஹேன பிரதேசத்தில் இடம்பெற்றது இதன் போது , உயிரிழந்த நபரின் பூதவுடலை கஹதுவ – கடஹேன வீதியில் வைத்து வீதியை மறிக்கும் வகையில் பிரதேசவாசிகள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அது , அவரின் மரணத்திற்கு காவற்துறையினர் பொறுப்பு கூற வேண்டும் என