இளைஞர் பலியான இடத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தால் பரபரப்பு!

Posted by - November 27, 2017

தமிழகம் கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வளைவில் மோதி, இளைஞர் உயிரிழந்த இடத்தில் “who killed ragu ? ” என்ற வாசகம் நிறப்பூச்சால் எழுதப்பட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, கோவை அவினாசி வீதியில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற ரகுபதி என்ற இளைஞரின் இருசக்கர வாகனம், அலங்கார வளைவின் மீது மோதி உயிரிழந்தார். இந்நிலையில், அவினாசி வீதியில் ரகுபதி உயிரிழந்த இடத்தில், “who killed ragu ? ” என நிறப்பூச்சால் எழுதப்பட்டுள்ளது.

யாழில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் மர்மம்

Posted by - November 27, 2017

மானிப்பாய் சங்கம்வேலி பகுதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 3 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீண்ட நேரமாக சிறுவனை காணாமல் தேடிக்கொண்டிருந்த பெற்றோர் கிணற்றை பரிசோதித்த போது சிறுவன் கிணற்றிற்குள் சடலமாக மிதப்பதனை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், காவல் துறையினருக்கு அறிவித்ததன் பின்னர் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த கிணற்றினை சுற்றி மூன்று அடிக்கு மதில் காணப்படுகின்ற நிலையில்

முச்சக்கரவண்டி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

Posted by - November 27, 2017

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுங்காயமடைந்துள்ளார். தலவாக்கலை ஹொலிரூட் பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி நேற்று(26) இரவு 7.30 மணியளவில் தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில் ஹொலிரூட் பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டி சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் சாரதி

9 அடி உயரமான இரு கஞ்சா செடிகள் மீட்பு : ஒருவர் கைது

Posted by - November 27, 2017

கண்டி மாவில்மடை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இருந்து ஒன்பது அடி உயரமுள்ள இரு கஞ்சா செடிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இன்று பொலிஸ் அவசரப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி குறித்த இடத்தை சோதனையிட்ட பொலிஸார் அங்கு ஹோட்டல் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளதுடன் அவ் வளாகத்தில் ஒன்பது அடி உயரமுடைய இரு கஞ்சா இசடிகள் வளர்க்கப்பட்டிருந்ததையும் அவதானித்துள்ளனர். அவ் இரு கஞ்சா செடிகளையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேக

பாடசாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் ; இரு மாணவர்கள் வைத்தியசாலையில்

Posted by - November 27, 2017

கொஸ்கட பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்களும் அந்தப் பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவர்கள் எனவும் தாக்குதலை மேற்கொண்ட மாணவனும் அதே வகுப்பில் கல்விபயில்பவரெனவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலிர் ஒரு மாணவனுக்கு வயிற்றிலும் மற்றைய மாணவனுக்கு கையிலும் காயமேற்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஸ் விபத்தில் 23 பேர் காயம்

Posted by - November 27, 2017

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அட்டன் பிரதான வீதியின் தெஹியோவிட்ட மாகம்மன பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று பகல் 2.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அட்டனில் இருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியானது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.விபத்தில் பஸ் சாரதி உட்பட 23 பேர் காயமடைந்த நிலையில்,

இணைய பாதுகாப்பு ; இலங்கைக்கு 72 ஆவது இடம்

Posted by - November 27, 2017

உலகளாவிய இணைய பாதுகாப்பு 2017 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தல் அட்டவணையில் இலங்கையானது 0.419 புள்ளிகளுடன் 72 ஆம் இடத்தை பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தொலைத்தொடர்பு அமைப்பானது இவ்ஆண்டுக்கான உலகலாவிய இணைய பாதுகாப்பு தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், முதலாம் இடத்தை சிங்கப்பூர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஆறு பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகள் உட்படுத்தப்பட்டுள்ளன. ஆபிரிக்க பிராந்திய நாடுகள், அமெரிக்க பிராந்திய நாடுகள், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை சேர்ந்த நாடுகள், பொதுநலவாய நாடுகள், பசுபிக்வலய மற்றும் ஆசிய

அச்சுறுத்தல்களையும் தடைகளையம் தாண்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி!!

Posted by - November 27, 2017

யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முன்பாக தமிழீழ மாவீரர்களுக்கும், தேச விடுதலைப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் இன்று காலை குறித்த இடத்திற்கு சென்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடுமையான பாதுகாப்புடன் இருக்கும் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு இன்று காலை 11.40 மணிக்கு நடைபெற்றுள்ளது.இதன்போது கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் நுழைவாயிலை மூடி நிறுத்தப்பட்டிருந்த

கொட்டும் மழையின் மத்தியிலும் அலையெனத் திரண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யாழ் பல்கலை சமூகம்!!

Posted by - November 27, 2017

யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.மாவீரர்களின் எழுச்சி கீதங்கள் இசைக்க, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர்களுக்கான நினைவிடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று காலை நடத்தப்பட்டுள்ளன. இதன்போது தமிழ் மக்களின் விடுதலைக்காக களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், ஊழியர்கள் எனப் பெருந்திரளானோர் மாவீரர் நினைவுத் தூபிக்கு மலர்

தமிழ்மக்கள் ஒன்றுபட்டு ஒன்றுமையினை வெளிக்காட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது-இரா.சம்பந்தன்

Posted by - November 27, 2017

தமிழ்மக்கள் ஒன்றுபட்டு நின்று மீண்டும் ஒருமுறை தமது ஒற்றுமையினை வெளிக்காட்டவேண்டிய காலகட்டமாக இன்று உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த நாடு கடன்சுமையில் இருந்துவிடுபட்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றம்பெறவேண்டுமானல் இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பில் அரசியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு  சனிக்கிழமை மாலை நடைபெற்றது. மட்டக்களப்பு தாண்டவன்வெளி, பேர்டினன்ட் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் இந்த