நிலையவள்

கூட்டு எதிர்க் கட்சியின் முதலாவது எதிர்ப்புக் கூட்டம் இன்று இரத்தினபுரியில்

Posted by - March 18, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலை இன்னும் தாமதிக்காமல் நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கூட்டு எதிர்க் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளின், முதலாவது கூட்டம் இன்று (18) இரத்தினபுரியில் நடைபெறுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு அடுத்து வரும் மே மாதம் 19 ஆம்…
மேலும்

அரச பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted by - March 18, 2017
அரச பல்கலைக்கழகங்களிலுள்ள விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்களுக்கு இம்முறை கல்வியாண்டுக்கு மாணவர்களின் விண்ணப்பங்கள் போதியளவு கிடைக்கப் பெறாதுள்ளதாகவும், இதனால் மீண்டும் அவற்றுக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…
மேலும்

சேதம், இழப்பு இன்றி கப்பல் மீட்கப்பட்டமை இராஜதந்திர வெற்றி- அரசாங்கம்

Posted by - March 18, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலையும் அதிலிருந்த எட்டு இலங்கையர்களையும் எந்தவிதமான ஆபத்துக்களும் இன்றி மீட்க முடிந்தமை இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர வெற்றியாகும் என வௌிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார். எரிஸ் – 13 எனும் கப்பல் கடற் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டமையை…
மேலும்

கிளிநொச்சிப் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழகம் ஆதரவு(படங்கள்)

Posted by - March 18, 2017
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் தொடர்கின்றநிலையில் யாழ் பல்கலைகழக முகாமைத்துவப் பிரிவு மாணவர்கள் தமது ஆதரவை வழக்கும் முகமாக கந்தசுவாமி ஆலயம் முன்றலில் நடைபெறுகின்ற போராட்டத்தில் இணைந்து தமது ஆதரவினை வழங்கி உள்ளனர். அத்துடன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிற்கான…
மேலும்

ஒட்டிசுட்டானில் கோரவிபத்து முன்னாள் போராளி மரணம்

Posted by - March 18, 2017
  ஓடிசுட்டன்  சந்தியில்  பிரதான  வீதிக்கு  ஏற முற்ப்பட்ட  மோட்டார் வாகனமும்  பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர்வாகனமும்   விபத்துக்குள்ளானதில்   மோட்டர்  சைக்கிளில் பயணித்த முன்னாள்  போராளியும்  வன்னி விழிப்புலன்  அற்றோர் சங்கத்தின் முன்னாள்  பொருளாளருமான குமாரசாமி  நந்தகோபால்(நந்தன்) என்பவரும்  அவருடைய…
மேலும்

பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் -திரு திருச்சோதி , அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை

Posted by - March 17, 2017
சிறிலங்கா அரசாங்கமானது 2015 ஆண்டு ஒக்டோபர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்களை மதிக்காமல், அங்கு வழங்கிய வாக்குறுதிகளை வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தாமல், இவ் விடயம் சார்ந்த முக்கிய சர்வதேச உதவிகளை நிராகரிக்கும் வகையில் தனது…
மேலும்

வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு சக்கரநாற்காலிகள்(காணொளி)

Posted by - March 17, 2017
வவுனியாவில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு சக்கரநாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. வவுனியாவில் பம்பைமடுவில் அமைந்துள்ள வைகறை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள விசேட தேவக்குட்பட்டோருக்கு சக்கரநாற்காலிகள் இன்று வழங்கப்பட்டன. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலையில் அமைந்துள்ள…
மேலும்

Posted by - March 16, 2017
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளருக்கான கருத்தரங்கு(காணொளி)   யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளருக்கான கருத்தரங்கு ஒன்று இன்று நடைபெற்றது. சமுக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் அனுசரணையில் ஊடகவியலாளர்களின் உளவளத்துறை தொடர்பான கருத்தரங்கு நடாத்தப்பட்டது. கருத்தரங்கினை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க…
மேலும்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 24ஆவது நாளாக…(காணொளி)

Posted by - March 16, 2017
  மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 24ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. தமக்கான நியமனங்களை வழங்கக் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக, 24ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகம் போராட்டம் நடாத்திவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், இன்று தாங்கள் பெற்ற…
மேலும்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம்; 21ஆவது நாளாக….(காணொளி)

Posted by - March 16, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின்போது, நான்காயிரம் கடிதங்கள் இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் வவுனியாவில் இன்றுடன் 21ஆவது நாளாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தமது போராட்டத்திற்கு நீதி…
மேலும்