நிலையவள்

நுரைச்சோலை மின்நிலைய கோளாறுக்கு நிரந்தர தீர்வு காண சீனாவுடன் பேச்சு

Posted by - April 19, 2017
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் முதலாம் இலக்க இயந்திரம் 37 தடவைகள் கோளாறுக்கு உள்ளாகியுள்ளன. இயந்திர கோளாறுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்குடன் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள…
மேலும்

குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஒன்பது பேர் மருத்துவமனையில்

Posted by - April 19, 2017
இருவேறு இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்கான பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன் – செனன் மற்றும் வட்டவளை விக்டன் தோட்டங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று…
மேலும்

காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் -எம்.ஏ. சுமந்திரன்

Posted by - April 19, 2017
இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 50 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையிலான யுத்தமே கேப்பாபுலவில் இடம்பெற்று வருவதாக கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளை…
மேலும்

இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் 7 பேர் கைது

Posted by - April 19, 2017
இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்த இலங்கை கடற்றொழிலாளர்கள் ஏழு பேர் நாகபட்டிணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக ‘ஹிந்து’ நாழிதழ் தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த இலங்கை கடற்றொழிலார்கள் பயன்படுத்திய விசைப் படகும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மீதொட்டமுல்லை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் நாளை

Posted by - April 19, 2017
மீதொட்டமுல்லை அனர்த்தத்துக்கான முழு பொறுப்பையும் ஏற்று தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மீதொட்டமுல்லை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை…
மேலும்

மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படவேண்டும் – மகிந்த

Posted by - April 19, 2017
மீதொட்டமுல்லை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். குருணாகலையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும்

அம்பலந்தொட பிரதேசத்தில் 4 பேர் மீது துப்பாக்கி பிரயோக சம்பவம்: இருவர் கைது

Posted by - April 19, 2017
அம்பலந்தொட பிரதேசத்தில் 4 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15ம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.…
மேலும்

இலங்கை வரவிருந்த பிரித்தானிய வௌிவிவகார அமைச்சரின் விஜயம் ரத்து!

Posted by - April 19, 2017
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவிருந்த பிரித்தானிய வௌிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக விவகார அமைச்சர் ஆலோக் ஷர்மா அந்த விஜயத்தை ரத்துச்செய்துள்ளார். அந்நாட்டு பிரதமர் தெரேசா மே திடீரென தேர்தலொன்றை அறிவித்துள்ளதால் இவ்வாறு குறித்த பயணம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக இந்நாட்டில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்…
மேலும்

பெண்கள் தொடர்பில் வீரம்செறிந்த வரலாறு எழுதப்பட்ட மண்ணில் பெண்கள் உரிமைகள் நிலைப்பாடவில்லை

Posted by - April 19, 2017
பெண்கள் தொடர்பில் வித்தியாசமான வீரம் செறிந்த வரலாறு எழுதப்பட்ட மண்ணில்  யுத்தகளத்தில் தலைமை தாங்கிய பெண்களை கொண்ட சமூகத்தில்  இன்னும் பெண்கள் தொடர்பில் மாற்றம் ஏற்படவில்லை என்பது கவலைக்குரியது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூகநீதிகான மக்கள் அமைப்பின் அமைப்பாளர்…
மேலும்

அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

Posted by - April 19, 2017
தமிழர் தாயகப்பகுதியை ஆக்கிரமித்திருந்த இந்திய படையினரைவெளியேறக்கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில்குருந்த மர நிழலில் ஒருமாத காலமாக உண்ணாவிரதம் இருந்துஉயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது  ஆண்டு நினைவு தினம் இன்று புதன்கிழமை பகல் 9-30மணிக்கு கிளிநொச்சில் அமைந்துள்ள தமிழ்தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது வட மாகாணசபை…
மேலும்