நிலையவள்

வெறிச்சோடியது மட்டுமாநகர்(காணொளி)

Posted by - April 27, 2017
மட்டக்களப்பிலும் இன்று மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய அரசின்கீழ் இயங்குகின்ற அரச அலுவலகங்கள், மருந்தகங்கள், உணவு நிலையங்கள் தவிர்ந்த ஏனைய நிறுவனங்கள், மாகாண அரசின்கீழ்வரும் அலுவலகங்கள், வங்கிகள் பாடசாலைகள் என்பன இயங்கவில்லை. இதனால் மட்டக்களப்பு நகர் வெறிச்சோடிக்காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்

வீதியை மறியல் போராட்டம்; குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - April 27, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நிலமைகளை அவதானித்ததுடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடினார். அவரின் வேண்டுகோளுக்கு அமைவாக…
மேலும்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வீதியை மறித்து போராட்டத்தில்….(காணொளி)

Posted by - April 27, 2017
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீலமீட்புக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டியும் ஆரம்பிக்கப்பட்ட மக்கள்…
மேலும்

டெங்கு ஒழிப்பு தொடர்பில் விஷேட சோதனைகள்

Posted by - April 27, 2017
டெங்கு ஒழிப்பு தொடர்பில் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கண்டறியும் நோக்கில் சுகாதார அமைச்சினால் விஷேட சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சோதனைகள் நாளை மற்றும் நாளை மறுதினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் டெங்கு ஒழிப்பு பிரிவுக்கு சுகாதார அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக…
மேலும்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு குறித்து கலந்துரையாடல்

Posted by - April 27, 2017
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு குறித்து இலங்கையும் இந்தியாவும் கலந்துரையாடியுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் பிராந்திய வளர்ச்சி குறித்து தெரிந்துக்கொள்ளும் பொருட்டு தொடர்…
மேலும்

அனுர சேனாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

Posted by - April 27, 2017
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க எதிர்வரும்  மாதம் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஶ்ரீ…
மேலும்

காவற்துறை அதிகாரியொருவரை கொலை செய்த சந்தேகநபர் சுட்டுக்கொலை

Posted by - April 27, 2017
குருணாகலை – மாஸ்பொத பகுதியில் காவற்துறை அதிகாரியொருவரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் காவற்துறையுடன் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு மோதலில் குறித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

முல்லையில் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 27, 2017
வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயக பகுதியெங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று கர்த்தால் அனுஸ்ரிக்கப்படுகிறது. அந்தவகையில் முல்லைத்தீவிலும் அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு பூரண கரத்தால் அனுஸ்ரிக்கப்பட்டதோடு தனியார் பேருந்துகளும் தமது பணிகளை நிறுத்தி பூரண ஆதரவு வழங்கினர்.…
மேலும்

மறிச்சுக்கட்டி பாதையில் பதாதைகளைத் தாங்கிய வண்ணம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - April 27, 2017
போராட்டத்தில் ஈடுபடுவர்களை எட்டியும் பார்க்காமல் மூடிய அறைக்குள் கூட்டமா?  மறிச்சுக்கட்டி மக்கள் முஸ்லிம் காங்கிரஸ்காரரை நோக்கி ஆவேசம் கொடூர வெயிலிலும் கட்டாந்தரையிலும் குந்தியிருந்து மண்ணை மீட்பதற்காக 32 நாட்களாக நாங்கள் போராட்டம் நடத்தும் போது எங்களை வந்து எட்டிப்பார்க்காமல் முசலிக்கு வந்து…
மேலும்

புற்றுநோய் மருந்தை அதிக விலைக்கு விற்ற மருந்தகம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணிப்புரை

Posted by - April 27, 2017
புற்றுநோய்க்காக வழங்கும் மருந்தை நோயாளிக்கு அதிக விலைக்கு விற்றதாக கூறப்படும் தனியார் மருந்தகம் ஒன்று தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பணிப்புரை விடுத்துள்ளார். நோயாளி ஒருவரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை கவனத்தில் கொண்டே இந்த…
மேலும்