நிலையவள்

குளவித் தாக்குதலுக்கு இலக்காகி 5 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - April 28, 2017
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயரபி தோட்டத்தில் இன்று முற்பகல்  11 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 5 பெண்கள்  குளவிகொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியதுடன் மூவர் தொடர்ந்து…
மேலும்

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 68 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 28, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை     அறுபத்திஎட்டாவது      நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
மேலும்

குப்பைகளை பிலியந்தலையின், கரதியானவில் இடுவதற்கு நாளை முதல் தடை

Posted by - April 28, 2017
கொழும்பு மாநகர சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகளை பிலியந்தலையின், கரதியானவில் இடுவதற்கு நீதிமன்றம் நாளை முதல் தடை விதித்துள்ளது. மீதொட்டமுல்ல குப்பை சேகரிக்கும் இடத்தில் ஏற்பட்ட அனர்தத்தை அடுத்து, கொழும்பு மாநகர சபையினால், கெஸ்பேவ நீதிமன்றத்தில்  கடந்த 17ம் திகதி முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு…
மேலும்

கரதியான பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம்

Posted by - April 28, 2017
கரதியான பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின் படி கரதியான பகுதியில் குப்பை கொட்டுவதற்கான அனுமதி இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில், இன்று காலை குப்பை லொறிகள் சென்றபோதே மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
மேலும்

மிருகங்களை அழிக்கக்கூடிய வெடி பொருட்களை வைத்திருந்தவர் கைது!

Posted by - April 28, 2017
அனுராதபுரம் – பக்மீகம பகுதியில் 6 வெடிக்கக் கூடிய சாதனங்களை வைத்திருந்த நபரொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த வெடி பொருட்களை மிருகங்களை கொலை செய்வதற்காக அவர் வைத்திருந்தமை பொலிஸாரரின் விசாரணையில்…
மேலும்

உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Posted by - April 28, 2017
கடந்தாண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று (28) அல்லது நாளை (29) வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது . பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டிற்காக 58,000 விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற…
மேலும்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம்

Posted by - April 28, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் இன்று திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது இந்த கொலையில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 10 ஆவது மற்றும் 12 சந்தேகநபர்களை விடுதலைசெய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இருவரையும்  விடுதலை…
மேலும்

இலங்கை அகதிகள் 46 பேர் நாடு திரும்பினர்

Posted by - April 28, 2017
தமிழகத்தில் அகதி முகாம்களில் இருக்கின்ற இலங்கை அகதிகள் 46 பேர் நேற்று வியாழக்கிழமை இலங்கைகை வந்தடைந்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். திருச்சியிலிருந்து இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் மூலம்…
மேலும்

சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது!

Posted by - April 28, 2017
பருத்தித்துறை – வல்லிபுரம் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் அனுமதிப்பித்திரமின்றி கடல் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபர் மற்றும்…
மேலும்

எதிர்வரும் 30 ஆம் திகதி இரவு தொடக்கம் விசேட போக்குவரத்து திட்டம்

Posted by - April 28, 2017
சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி மே மாதம் முதலாம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள 15 மே தினப்பேரணிகளுக்காக 2 ஆயிரத்து 600 இற்கும் அதிகமான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த தினத்தில், வாகன போக்குவரத்தை ஒழுங்கமைப்பதற்காக மேலும்…
மேலும்