நிலையவள்

காணமல் போனோரின் உறவுகளின் போராட்டத்துக்கு சம்மந்தன் விஜயம்

Posted by - May 18, 2017
முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்தார்.…
மேலும்

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு புதுக்குடியிருப்பு நகரில் சுடரேற்றி அஞ்சலி

Posted by - May 18, 2017
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படுகிறது அந்தவகையில் புதுக்குடியிருப்பு  வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு…
மேலும்

கிளிநொச்சியில் மஹாசேன் பலகாய அட்டகாசம்

Posted by - May 18, 2017
இன்று காலியில் இருந்து  கிளிநொச்சிக்கு  பேருந்து  ஒன்றில் வந்த  மஹாசேன் பலகாய சிங்கள  இனவாதக் கும்பல்  ஒன்று  கிளிநொச்சி நகரின் நடுவில்  உள்ள மின்கம்பங்களில்  இலங்கையின்  தேசியக் கொடியில்  முஸ்லீம் மற்றும்  தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்  படுத்துகின்ற  இரு நிறங்களும் அற்ற இலங்கை…
மேலும்

முல்லை வான்பரப்பில் வேவுவிமானம்

Posted by - May 18, 2017
இன்றைய  தினம் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் அந்தவகையில்  முல்லை வான்பரப்பில் முள்ளிவாய்க்காலை அண்டிய பகுதியில் அரைமணிநேரத்திற்கும் மேலாக வேவுவிமானம் கண்காணிப்பு செய்துவந்தது. நீண்ட நேரமாக வட்டமிட்டபடி இருந்தது குறிப்பிடத்தக்கது .
மேலும்

ஞானசார தேரருக்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும் – எச்.எம்.எம். ஹரீஸ்

Posted by - May 18, 2017
´நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாக செயற்படுகின்ற ஞானசார தேரரை நாயை இளுத்துச் சென்று அடைப்பது போன்று சிறைக்குள் தள்ளி தகுந்த நடவடிக்கை எடுப்போம்´ என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்தது போன்று…
மேலும்

எஸ் எம் சந்திரசேன காவற்துறை நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலை

Posted by - May 18, 2017
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாக உள்ளார். எதற்காக விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்து பற்றி அறிவிக்கப்படவில்லை என எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். எனினும் வடமத்திய மாகாணத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தாம் எடுத்த முயற்சியே…
மேலும்

வென்னப்புவ “Last Chance” வர்த்தக நிலையத்தில் தீ

Posted by - May 18, 2017
வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான “Last Chance” இலத்திரனியல் காட்சியறையில் திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் குறித்த காட்சியறை முற்றாகச் சேதமடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.…
மேலும்

நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயம்

Posted by - May 18, 2017
காத்தான்குடி – ஆரையம்பதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர். உந்துருளியில் சென்ற குறித்த இளைஞர் மீது பிரிதொரு உந்துருளியில் வந்த 2 பேர் இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தி…
மேலும்

தமிழர் தாயக பகுதியெங்கும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

Posted by - May 18, 2017
கடந்த 2009 ம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் காவுகொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்கப்படுகிறது அந்தவகையில் வடமாகான சபை ஏற்பாடு செய்த நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு முள்ளிவாய்க்…
மேலும்

சுயாதீன ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுமாறு பணிப்புரை – ஜனாதிபதி

Posted by - May 18, 2017
சுயாதீன ஆணைக்குழுக்களின் நடவடிக்கைகளை முறைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரைவிடுத்துள்ளார். 19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றது. இந்த கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடக…
மேலும்