நிலையவள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் புதிய சட்டமூலம்

Posted by - June 16, 2017
அடுத்த பாராளுமன்ற கூட்டத்தின் போது உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக புதிய சட்டமூலத்தை தாக்கல் செய்வதற்கு தயார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார். அடுத்து வரும் தேர்தலுக்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகிக்…
மேலும்

கேகாலையில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - June 16, 2017
கேகாலை – அம்பன்பிட்டிய தோட்டத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை அவர் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர்…
மேலும்

இந்திய மீன்பிடி படகுகளை நிபந்தனையுடன் விடுவிக்க தீர்மானம்

Posted by - June 16, 2017
நாட்டின் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றத்தில் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை நிபந்தனைகளுடன் விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். கைப்பற்றப்பட்ட ஒழுங்குமுறைக்கு அமைவாக படகுகளை விடுவிக்க தீர்மானித்திருப்பதாக அந்த அமைச்சில் நேற்று இடம்பெற்ற கடற்றொழில் ஆலோசனைக்…
மேலும்

முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Posted by - June 16, 2017
 வடக்கு மாகாண முதலமைச்சர்  சிவி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முதலமைச்சருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தும் கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள் பொது மக்கள் மற்றும் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னாள்…
மேலும்

வடக்கு முதல்வருக்கு ஆதரவு தெரிவித்து நல்லூரிலிருந்து போராட்டம்

Posted by - June 16, 2017
வடக்கு முதல்வருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையினரால் கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்ற  நிலையில் இன்றைய தினம் நல்லூர் ஆலயத்திற்கு முன்னால் முதல்வருக்கு ஆதரவாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது . ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்குபற்றிய…
மேலும்

காரியாலயமொன்றின் மீது தாக்குதல், 3 பிக்குகள் உட்பட ஆறுபேர் கைது

Posted by - June 16, 2017
கம்பஹாவிலுள்ள காரியாலயமொன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று பிக்குகள் உட்பட ஆறுபேர் கம்பஹா பொலிஸாரினால் கைது நேற்று(15) நண்பகல் செய்யப்பட்டுள்ளனர். சிங்ஹலே ஜாதிக இயக்கத்தின் தலைவர் சாலிய ரி. ரணவகவின் கம்பஹா முதுன்கொட வீட்டில் இருந்த காரியாலயத்தை பலவந்தமாக உடைத்து, அக்காரியாலயத்தில்…
மேலும்

விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு மரண தண்டனை

Posted by - June 16, 2017
விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு மொனராகலை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நேற்று இவ்வாறு மரண தண்டனைக்கு உள்ளானவர், மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ஜனவரி 21…
மேலும்

முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை வர்த்தக சங்கங்கள் பூரண கடையடைப்பு

Posted by - June 16, 2017
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை வர்த்தக சங்கங்கள் பூரண கடையடைப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்

யாழ் நகர் கர்த்தாலால் முடங்கியது

Posted by - June 16, 2017
தமிழ் மக்கள் பேரவையினரால் முதலமைச்சருக்கு கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை வர்த்தக நிலையங்கள் யாவும் பூட்டப்பட்டுள்ளன.
மேலும்

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டின் பிரதான சந்தேக நபர் கைது

Posted by - June 16, 2017
பிலியந்தலை பிரதேசத்தில் காவற்துறை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சிலரின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மெதிரிகிரிய பிரதேசத்தில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 10…
மேலும்