நிலையவள்

மருத்துவர்கள் இன்று பணிபகிஷ்கரிப்பு

Posted by - July 25, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பல்லைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றிய நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜயலத்தை வெள்ளைவான் கடத்தல் பாணியில் கைதுசெய்ய பொலிசார் மேற்கொண்ட முயற்சியை கண்டித்து அரச வைத்தியசாலை மருத்துவர்கள் பணிபகிஷ்கரிப்பில்…
மேலும்

ஆயிரம் கிலோ அரிசி வழங்கல்

Posted by - July 25, 2017
வாழ்வோம் வளம் பெறுவோம் 13ம் கட்டத்தில் ஆயிரம் கிலோ அரிசி வழங்கல். பங்களித்தனர் புலம்பெயர் அன்பர்கள்.  வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் பதின்மூன்றாம் கட்டமானது கடந்த 2017.07.22 ஆம் நாளன்று அவரது மக்கள்…
மேலும்

கிளிநொச்சியில் சந்தையை பூட்டி எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - July 25, 2017
இளஞ்செழியன் மீதான் தாக்குதலை கண்டித்து இன்று ( செவ்வாய் கிழமை) கிளிநொச்சி சந்தையை பூட்டி எதிர்ப்பு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, உயிரிழந்த மெய் பாதுகாவலருக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர்  பின் வீதியில்  யாழ்  மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்…
மேலும்

மக்கள் குடியிருப்புகளை விட்டு மயானங்கள் அகற்றப்படுவது அவசியம்

Posted by - July 25, 2017
மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியிலிருக்கும் மயானங்களை அகற்றி, அவற்றுக்குப் பொருத்தமான இடங்களில் அவற்றை அமைப்பது அவசியமாகும். இதனை மனிதாபிமான ரீதியாகவும் சமூக நீதியாகவும் செய்ய வேண்டும். இந்தப் பொறுப்பு தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் மாகாணசபை நிர்வாகத்துக்கும் உண்டு. இதைக் காலம் கடத்தாமல் உரிய…
மேலும்

நீதிபதி இளஞ்செழியனின் சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டவர் சரணடைந்தார்

Posted by - July 25, 2017
யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா . இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் காவற்துறையில் சரணடைந்துள்ளார். இன்று காலை பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர் புனர்வாழ்வு பெறாத முன்னாள்…
மேலும்

யேர்மனியில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - July 24, 2017
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய மாதமாகும்.சிங்கள இனவெறி அரசின் கோரமுகம் வெளிப்பட்ட காலம். சிங்கள அரசின் தமிழினப்படுகொலையின் அத்தியாயங்களில் வகைதொகையின்றி தமிழ்மக்கள் நரபலியெடுக்கப்பட்ட காலம்.     தமிழீழமே கார்மேகம் சூழ்ந்த கறுப்பான…
மேலும்

வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் ஒத்துவரவில்லை

Posted by - July 24, 2017
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனையில் ஒத்துவரவில்லை என சிரேஸ்ட்ட அரசாங்க உதவி இராசாயன பகுப்பாய்வாளர் வனிதா ஜெயவதி பண்டாரநாயக்க நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளார். வித்தியா கொலை வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாய…
மேலும்

அலைபேசியை கையளிக்குமாறு அர்ஜுனவுக்கு உத்தரவு

Posted by - July 24, 2017
மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான விசாரணைகளுக்காக அர்ஜுன் அலோசியஷின் அலைபேசியை குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. பேப்ர்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஷ், பிரச்சினைக்குரிய பிணைமுறி விநியோக நடவடிக்கை இடம்பெற்ற 2015 – 2016 காலப்பகுதியில்…
மேலும்

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம்;இரண்டு விசாரணை குழுக்கள் நியமனம்

Posted by - July 24, 2017
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகத்திற்குரியவரை கைது செய்ய விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சாதாரண உடையுடன் உள்ள அதிகாரிகளை கொண்ட இரண்டு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கைது…
மேலும்

8 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கு

Posted by - July 24, 2017
பொகவந்தலாவை –  லெட்சுமிதோட்டம்  மத்திய பிரிவில்  தேயிலை மலையில் கொழுந்து பறித்து  கொண்டிருந்த  8 பெண் தொழிலாளர்கள் குளவி  கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பொகவந்தலாவ பிரதேச  மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக  பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்  இன்று காலை 9.00 மணி…
மேலும்