நிலையவள்

கடற்படை முன்னாள் பேச்சாளரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 2, 2017
கடற்படை முன்னாள் பேச்சாளரான டீ.கே.பி.தசநாயக்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் வைத்து 11 பேர் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் டீ.கே.பி.தசநாயக்க கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
மேலும்

சுமந்திரன் மீதான கொலை வழக்கு ; சூத்திரதாரியை நாடுகடத்த மூவர் அடங்கிய குழுவினர் அவுஸ்திரேலியா பயணம்

Posted by - August 2, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியை நாடுகடத்த  இலங்கையில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவினர் அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை  கொலை செய்ய இரு…
மேலும்

மன்னார் பேசாலைப் பகுதியைச் சேர்ந்தவரின் படகு இந்தியாவில் கைப்பற்றல்

Posted by - August 2, 2017
மன்னார் பேசாலைப் பகுதியைச் சேர்ந்தவரின் படகு ஒன்று நேற்று முன்தினம் இரவு இந்தியாவின் புதுச்சேரிப் பிரதேசத்தில் வைத்து கரையோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்பட்டே தற்போது புதுச்சேரியில் குறித்த படகு கைப்பற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன.…
மேலும்

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்னால் சமுர்த்தி பயனாளிகள் போராட்டம்

Posted by - August 2, 2017
பருத்தித்துறை  பிரதேச செயலகத்திற்கு முன்னால் சமுர்த்தி பயனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10 வருடங்களாக சமுர்த்தி நிவாரணம் பெற்று வந்த வடமராட்சி  பகுதி மக்கள் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற சமுர்த்தி…
மேலும்

12 உள்ளூர் கடற்றொழிலாளர்கள் கைது

Posted by - August 2, 2017
சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 உள்ளூர் கடற்றொழிலாளர்கள் மன்னாரில் கைதாகியுள்ளனர். மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் வைத்து அவர்கள் கைதானதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.  அவர்களின் நான்கு படகுகள் மற்றும் சட்டவிரோத வலைகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  கைதானவர்கள் விடத்தல் தீவு…
மேலும்

யாழில் திருட்டு முயற்சி முறியடிப்பு

Posted by - August 2, 2017
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஓர் வீட்டிற்குள் இரவு 7.30 மணியளவில் உள்நுழைந்த இரு இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முதியவரின் சாதுரியத்தால்  முறியடிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஓர் வீட்டிற்குள் இரு இளைஞர்கள்  இரவு 7.30 மணியளவில் சாதுரியமாக  உள்நுழைந்த…
மேலும்

நயினாதீவு – குறிகட்டுவான் தனியார் படகு உரிமையாளர்கள் இன்று முதல் பணி பகிஸ்கரிப்பு

Posted by - August 2, 2017
நயினாதீவு-குறிகட்டுவான் தனியார் படகு உரிமையாளர்கள் இன்று 02/08/2017 முதல்  பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளார்கள். மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவையினை இலகுவாக வயது முதிர்ந்தவர்கள் முதல் யாவரும் சிரமத்திற்குள்ளாகாமல் பயணம் செய்யக்கூடிய விதமாக தரமான படகுகள் மூலமாக 30ரூபா கட்டணத்தில் காலை முதல் மாலை…
மேலும்

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் சமுர்த்தி பயனாளிகள் போராட்டம்

Posted by - August 2, 2017
கடந்த 10 வருடங்களாக சமுர்த்தி நிவாரணம் பெற்று வந்த காரை நகர் பகுதி மக்கள் காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற சமுர்த்தி மீளாய்வின் போது தாம் புறக்கணிக்கப்பட்டதாகவும் தமக்கு சமுர்த்தி நிவாரணம்…
மேலும்

காசநோயை இல்லாதொழிக்க விசேட செயலமர்வு

Posted by - August 1, 2017
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் காசநோயை இல்லாதொழிக்கும் நோக்கில் விசேட செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது. உலக காசநோய் தினத்தை முன்னிட்டு வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஏற்பாடு செய்திருந்த இந்த செயலமர்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள சுகாதார அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.…
மேலும்

வடக்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஆரம்பமாம் – மகிந்த

Posted by - August 1, 2017
“தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் ஆரம்­ப­மா­கும்­போது, பொலி­ஸார் மீது­தான் முத­லில் தாக்கு­தல் நடத்­தி­னார்­கள். வடக்­கில் தற்­போது நடை­பெ­றும் சம்­ப­வங்­கள் வெறும் ஆரம்­பம் மட்­டுமே. போகப் போக இன்­னும் நடக்­கும்” இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார். மக்­கள் சந்­திப்பு…
மேலும்