நிலையவள்

காங்கேசன்துறை கடற்பரப்பில் 153 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

Posted by - October 12, 2017
காங்கேசன்துறை கடற்பரப்பிற்குட்பட்ட பகுதியில் அநாதரவாக பொதி ஒன்று காணப்படுவதாக கிடைத்த தகவலினையடுத்து அங்கு சென்ற கடற்படையினர் குறித்த பொதியை மீட்டு சோதனை மேற்கொண்ட வேளையிலேயே குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த கேரள கஞ்சாவினை கடத்திவந்த நபர்கள் தமது வருகையை அறிந்து…
மேலும்

மதுவரி கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை

Posted by - October 12, 2017
செயற்கை கள் உட்பட ஏனைய சட்டவிரோத கள் உற்பத்திகளைத் தடுப்பதற்காக மதுவரி கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டுக்குள் உற்பத்தியை நிர்ணயம்செய்யும்நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளரும் காணி அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். அரச…
மேலும்

பிரித்தானிய மகாராணியின் செய்தியை தாங்கிய அஞ்சல் ஓட்ட கோல் இன்று இலங்கைக்கு

Posted by - October 12, 2017
2018ம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டிகளுக்காக பிரித்தானிய மகாராணியினால் விடுத்த செய்தியை தாங்கிய அஞ்சல் ஓட்ட கோல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. 1930ம் ஆண்டு தொடக்கம் அனுசரிக்கப்படும் பாரம்பரியத்திற்கு அமைய இக் கோல் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கமாகும். குறித்த…
மேலும்

ஒய்வுபெற்ற ரயில் சாரதிகளை ரயில்வே திணைக்களம் மீளழைப்பு

Posted by - October 12, 2017
ஒய்வுபெற்ற, ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த ரயில் சாரதிகளையும் மற்றும் காவலர்களையும் உடனடியாக சேவையில் ஈடுபடுமாறு ரயில்வே திணைக்களம் அறிவிப்புவிடுத்துள்ளது. மேலும் அவ்வூழியர்களை இன்று மதியம் தொடக்கம் சேவையில் ஈடுபடுமாறு அறிவித்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது மேலாளர் எஸ்.எம் அபயவிக்ரம தெரிவித்தார்.…
மேலும்

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு அழைப்பாணை

Posted by - October 12, 2017
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 25ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணை புவனேக அலுவிகார உள்ளிட்ட மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் இன்று வழங்கப்பட்டுள்ளது. மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் ஒய்வு…
மேலும்

புதையல் தோண்டிய 9 பேர் கைது

Posted by - October 12, 2017
ஹபரனை, பலுகஸ்வெவ காட்டுப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹபரனை பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து நடத்திய சோதனையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புதையல் தோண்ட பயன்படுத்திய…
மேலும்

ரத்தொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

Posted by - October 12, 2017
6 மாத காலத்திற்கு முன்பு பெண்ணொருவருக்கு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புபட்ட ரத்தொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கைது செய்யப்பட்ட…
மேலும்

இலங்கையில் தாய்வான் புலனாய்வு வங்கி அதிகாரிகள்

Posted by - October 12, 2017
தாய்வானின் வங்கி அதிகாரிகள் மற்றும் இரு புலனாய்வு உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.நேற்றையதினம் இரவு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து பெருந்தொகைப் பணம் இலங்கையிலுள்ள வங்கி ஒன்றுக்கு பரிமாற்றப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்கு…
மேலும்

யாழில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் புதியவகை நுளம்புகள்

Posted by - October 12, 2017
யாழில் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் புதியவகை நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய சுற்றுப் புறத்தில் உள்ள 19 கிணறுகளில் இருந்து புதிய வகையான மலேரியா நுளம்புகள் இணங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அந்த நுளம்புகள்…
மேலும்

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வவுனியாவில் புதிய அமைப்பு

Posted by - October 12, 2017
அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஜனநாயக ரீதியாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், அழுத்தம் கொடுக்கும் வகையிலும் புதிய அமைப்பு ஒன்று உதயமாகியுள்ளது. வவுனியா இந்திரன் விருந்தினர் விடுதியில் நேற்று மாலை நடைபெற்ற…
மேலும்