நிலையவள்

இன்று நண்பகலுக்குள் சேவைக்கு வாருங்கள் !- சிவப்பு அறிவித்தல்

Posted by - December 11, 2017
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் இன்று (11) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் சேவைக்கு சமூகமளிக்காதவிடத்து சம்பந்தப்பட்ட சகல ஊழியர்களும் சேவையிலிருந்து நீங்கிக் கொண்டவர்களாக கருதப்படுவர் என போக்குவரத்து அமைச்சு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7…
மேலும்

93 சபைகளுக்கான வேட்பு மனு இன்று முதல் ஏற்பு

Posted by - December 11, 2017
உள்ளுராட்சி சபைகள் 93 இற்கான வேட்பு மனுக்கள் ஏற்பு இன்று (11) முதல் ஆரம்பமாகின்றது. இதன்படி, 07 மாநகர சபைகள், 18 நகர சபைகள் மற்றும் 68 பிரதேச சபைகள் என்பவற்றுக்கு இவ்வாறு வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. இந்த நடவடிக்கை…
மேலும்

ரயில்வே ஊழியர்கள் கேட்டதைக் கொடுத்தால் எமக்கும் தேவை- சுகாதார தொழிற்சங்கம்

Posted by - December 11, 2017
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் அதிகரித்தால், அந்த சம்பள அதிகரிப்பை சுகாதாரத் துறையிலுள்ள பிரிவுகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய அறிவித்துள்ளார். ரயில்வே ஊழியர்கள் தமது…
மேலும்

ஐ.தே.க.வின் கெஸ்பேவ தொகுதி இரண்டாகியது- ஒரு குழு சுயாதீனம்

Posted by - December 11, 2017
கெஸ்பேவ தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களிடையே பிரிவினை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தலில் கட்சியின் ஒரு குழு சுயாதீனமாக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அக்கட்சியின் இளைஞர் பிரிவு இவ்வாறு விலகுவதற்குத் தீர்மானித்துள்ளது. தொகுதி அமைப்பாளர் தொடர்பில் ஏற்பட்ட உடன்பாடின்மை இவர்கள் கட்சியிலிருந்து…
மேலும்

நீதிபதி இளஞ்செழியனிற்கு இடமாற்றம்

Posted by - December 11, 2017
நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நேற்று யாழ். நீதிமன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். “யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தையும் பொறுப்பையும் நிறைவேற்றிவிட்டேன். மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கான இடமாற்றம் விரைவில் எனக்கு வரும் எனவும்…
மேலும்

ஹிக்கடுவையில் ரஷ்யப் பிரஜை பலி

Posted by - December 10, 2017
ஹிக்கடுவை – திரானகம பகுதி கடலில் நீராடச் சென்ற ரஷ்யப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். திரானகம பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்ற வேளை குறித்த ரஷ்யப் பிரஜை மற்றும் அவரது உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மனைவி ஆகியோர்…
மேலும்

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்கள் சிறு விடயங்களுக்காக பிரிவடைந்து செல்லக்கூடாது-இரா.சம்பந்தன்

Posted by - December 10, 2017
கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்கள் சிறு விடயங்களுக்காகப் பிரிவடைந்து செல்லக்கூடாது.நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பங்காளிக் கட்சிகளிடத்தில் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற…
மேலும்

உள்ளூராட்சித் தேர்தலுக்கு மாவட்ட முகவர்களை நியமித்த தமிழ் அரசுக் கட்சி

Posted by - December 10, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சி மாவட்ட ரீதியில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களின் விபரங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களுக்குமாறு அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களின் விபரங்களை தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.…
மேலும்

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய சடலம்!

Posted by - December 10, 2017
மாத்தறையில், வீடொன்றினுள் இருந்து இறந்து பல நாட்களான ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு சென்ற பொலிஸார், வீட்டின் பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்து உள்ளே சென்று ஆராய்ந்தனர். அப்போது, வீட்டின்…
மேலும்

மண்சரிவு அபாயம் : 400க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்.!

Posted by - December 10, 2017
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் ஆகிய தோட்டங்களில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்களை தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட…
மேலும்