நிலையவள்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - March 14, 2018
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றையும் மற்றும் போதைப் பொருட்களையும் வைத்திருந்த நபர் ஒருவர் மித்தெனிய லபுஹேன்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து சந்தேகநபர்…
மேலும்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 5 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 14, 2018
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கொட்டியாகலை கிழ் தோட்ட தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில், பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 09.45.மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.…
மேலும்

ஆன்மீக சொற்பொழிவாளர் வசந்தா வைத்தியநாதன் காலமானார்

Posted by - March 14, 2018
ஆன்மீக சொற்பொழிவாளர் கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன் இன்று காலமானார். சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். 1937 ஆம் ஆண்டு பிறந்த வசந்தா வைத்தியநாதன்  வாழ்நாளின் பெரும் பகுதியை ஆன்மீகத்திற்காவே அர்ப்பணித்திருந்தார்.…
மேலும்

அறிக்கை கிடைத்ததன் பின்னரேயே அவசரகால சட்டம் நீக்கம்- மத்தும பண்டார

Posted by - March 14, 2018
அவசர கால சட்டம் மற்றும் சமூக வலைத்தள தடை நீக்கம் என்பன தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையென சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில்  இடம்பெற்ற பதற்ற நிலைமையினால் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டது. அது…
மேலும்

கண்டி பிரச்சினை குறித்து கருத்து வெளியிட மறுத்த பொலிஸ் மா அதிபர் ..!

Posted by - March 14, 2018
யாருக்குத்தான் இன்று குற்றச்சாட்டுக்கள் இல்லையென பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்த தெரிவித்தார். கண்டி சம்பவம் தொடர்பில் பொலிஸார் மீது குற்றம்சாட்டப்படுகின்றதே எனவும், இது தொடர்பில் தங்களது கருத்து என்னவெனவும் ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்து…
மேலும்

சுகாதார சேவையை மேம்படுத்த 36,500 கோடி வெளிநாட்டு முதலீடு

Posted by - March 14, 2018
2020ம் ஆண்டு வரையில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் இருந்து இந்த வெளிநாட்டு…
மேலும்

புதிய நீர் விநியோகத்திட்டங்களை துரிதப்படுத்தவும் – ரவூப் ஹக்கீம்

Posted by - March 14, 2018
கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகத்திட்டங்களை மேம்படுத்துமாறு நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தனது அமைச்சில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் இந்த இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். புதிதாக…
மேலும்

63 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - March 14, 2018
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, குடாகம பகுதியில் வீடு ஒன்றில் விற்பனைக்காக வைத்திருந்த 63 கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை இன்று காலை 10 மணியளவில் ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே சோதனை மேற்கொண்ட பொலிஸார்…
மேலும்

நான்கு நாட்களின் பின் கரையொதுங்கிய மீனவரின் சடலம்

Posted by - March 13, 2018
வடமராட்சி கட்டைக்காட்டில் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போன மீனவர் இன்று சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். வடமராட்சி கட்டடைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த மீனவரான தேவதாசன் யூட்அலக்சன் (வயது 38) கடந்த 09 ஆம் திகதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல்…
மேலும்

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கிளிநொச்சி விஜயம் (படங்கள்)

Posted by - March 13, 2018
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். குறித்த சந்திப்பு இன்று 13.03.2018 மணியளவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சுவில் உயர்தானிகர்,…
மேலும்