நிலையவள்

தெமடகொட தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் தீ – 9 வீடுகள் சேதம்

Posted by - March 20, 2018
தெமடகொட, மௌலான தோட்டப்பகுதியில் தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் நேற்று (19) இரவு 9 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் 9 வீடுகள் சேதமடைந்துள்ளன. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெமடகொட பொலிஸார்…
மேலும்

மக்களுக்கு சிறப்பான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அரசாங்கம் திடசங்கற்பம் –

Posted by - March 20, 2018
எதிர்காலத்தில் பொறுப்புக்களை மென்மேலும் சிறப்பாக நிறைவேற்றி மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக தெரிவான அங்கத்தவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு…
மேலும்

அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்துவரவே முடியாது- பிரதிபா மஹாநாம

Posted by - March 20, 2018
மத்திய வங்கி பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரியான அர்ஜுன் மஹேந்திரனை இந்நாட்டுக்கு கொண்டுவர முடியவே முடியாது என சிரேஷ்ட சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதிபா மஹாநாம ஹேவா   தெரிவித்தார். பிரதமர் அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்த போதாவது, நண்பரே ! எமது நாட்டுக்கு…
மேலும்

அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சமூகக் கடமையாக கருதுங்கள்- நிதி அமைச்சர்

Posted by - March 20, 2018
அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சகலரும் செலுத்த வேண்டும் எனவும் அதனை ஒரு சமூகக் கடமையாக கொள்ள வேண்டும் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக்…
மேலும்

கூட்டு எதிர்க் கட்சியின் தாளத்துக்கு ஆடினால், அரசாங்கத்தில் இருக்க கூடாது- UNP

Posted by - March 20, 2018
அரசாங்கத்திலுள்ள எந்தவொரு அமைச்சராவது கூட்டு எதிர்க் கட்சியின் தாளத்துக்கு ஆடுவதற்கு முனைவார்களாயின் அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதமர்…
மேலும்

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் இன்று முதல்

Posted by - March 20, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சகல உறுப்பினர்களினதும் பதவிக் காலம் இன்று (20) முதல் ஆரம்பிக்கிறது. பெரும்பான்மைப் பலம் பெற்றுள்ள சபைகளின் கன்னி அமர்வு எதிர்வரும் 10 நாட்களுக்குள்ளும், எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்கும் அதிகாரம் பெறாத சபைகளின் கன்னி…
மேலும்

மூன்று கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்பவியல் ஆய்வு கூடம் ஜனாதிபதியினால் யாழில் திறந்து வைப்பு!!

Posted by - March 19, 2018
யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் ((St. Patrick’s College) மூன்று கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தை (Technology Center) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தார். இன்று (19) காலை 9.30 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக நாடா…
மேலும்

மட்டக்களப்பில் கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்பு!!

Posted by - March 19, 2018
மட்டக்களப்பு – வவுணதீவு, குறிஞ்சாமுனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை கணவன் மற்றும் மனைவி இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, குறிஞ்சாமுனை முதலாம் குறுக்கிலுள்ள வீடொன்றிலிருந்து 40 வயதான க.வேதநாயகமும் அவரது மனைவி 28 வயதான ந.லோகநாயகி…
மேலும்

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் இன்று பதவிப்பிரமாணம்!!

Posted by - March 19, 2018
கொழும்பு மாநகர முதல்வராக ரோசி சேனாநாயக்க இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார். அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று மாலை 6 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம்  செய்து கொள்ள உள்ளார்.கொழும்பு மாநகர முதல்வராக பதவியேற்கும்…
மேலும்

தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்த இளைஞன்!! வவுனியாவில் தொடரும் சோகம்!!

Posted by - March 19, 2018
வவுனியாவில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவவுனியா, பண்டாரிக்குளம், மில் வீதி பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கத்தியால் தனது கழுத்தை அறுத்து…
மேலும்