நிலையவள்

கரையோர ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

Posted by - November 22, 2025
கரையோர ரயில் மார்க்கத்திலான போக்குவரத்து நடவடிக்கைகள் வெலிகம வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (21) பிற்பகல் 02.05 மணியளவில் மாத்தறையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்று, கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.…
மேலும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் A/L மாணவர்களுக்கு படகுச் சேவை!

Posted by - November 22, 2025
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் சிரமத்திற்குள்ளாகியுள்ள உயர்தரப் பரீட்சை மாணவர்களைப் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக்கா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இவ்விரு மாவட்டங்களிலும்…
மேலும்

1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

Posted by - November 22, 2025
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (22) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி செனவிரட்ன தலைமையிலான…
மேலும்

கிங், நில்வளா கங்கைகளில் வெள்ள அபாயம்

Posted by - November 22, 2025
கிங் மற்றும் நில்வளா நதிப் படுக்கைகளின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாகச் சிறியளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பின்வரும் பிரதேச…
மேலும்

கடுகன்னாவ மண்சரிவு – பெண் ஒருவர் உயிருடன் மீட்பு

Posted by - November 22, 2025
இன்று (22) முற்பகல் பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மணிசரிவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி, தற்போது வைத்தியசாலையில் 5 பேர் சிகிச்சைப் பெற்று…
மேலும்

அனைத்து பிரதேச செயலாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

Posted by - November 22, 2025
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் இன்று (22) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் ‘பிரஜாசக்தி’ கிராமிய அபிவிருத்தி அணுகுமுறை குறித்து தெளிவுபடுத்துவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
மேலும்

பழைய முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்ற புதிய திட்டம்

Posted by - November 22, 2025
பழைய எரிபொருள் முச்சக்கர வண்டிகளை மின்சார முறைக்கு மாற்றுவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். மேலும், முச்சக்கர வண்டிகளின் மேற்கூரையில் சூரிய சக்தி தகடுகளை பொருத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக…
மேலும்

நுவரெலியாவில் மண்சரிவால் வீடு பலத்த சேதம்

Posted by - November 22, 2025
நுவரெலியா மாவட்டம், திம்புலபத்தனை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது.   ஹட்டன் – கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் மேல் பிரிவில் நேற்று (21) பிற்பகல் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.…
மேலும்

யாழ். குருநகர் கடலில் 17 வயதுச் சிறுவனின் சடலம் மீட்பு

Posted by - November 22, 2025
யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப்…
மேலும்

மாலைத்தீவு வேலைவாய்ப்பு மோசடி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 21, 2025
மாலைத்தீவில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகப் போலி விளம்பரங்களை வெளியிட்டு, இலங்கைத் தொழிலாளர்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.   மாலைத்தீவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இது தொடர்பில் தமக்குத்…
மேலும்