இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விழா கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
குடியரசு தின விழாவில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தேசியக் கொடி ஏற்றியதும், தேசியகீதம் ஒலிக்கப்பட்டது.
இதன்பின்னர், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்த்து செய்தியினை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாசித்தார்.
இதன்போது, இந்திய கலாசாரத்தை பறைச்சாட்டி நாட்டிய நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

