கழுத்தில் வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

21 0

கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மகாஓயா – பெரகல வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து  கைப்பற்றப்பட்டுள்ளது.

வராபிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், அந்த பெண், கால்நடைகளை மேய்ச்சலுக்காக கட்டுவதற்கு, வௌ்ளிக்கிழமை (23) அன்று  இந்தக் வனத்திற்கு சென்றுள்ளார்.

அவ்வாறு சென்றவர், வீடு திரும்பாமையால் பிரதேச மக்களுடன் இணைந்து  உறவினர்கள் மேற்கொண்ட தேடுதலின் போது இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மகாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்