நிலையவள்

மின்னுற்பத்தி திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி

Posted by - May 9, 2018
நீண்டகால மின்னுற்பத்தி திட்டத்துக்கு இன்றைய தினம் (09) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனினும், குறைந்த செலவில் மின்சாரத்தை பெறும் திட்டத்துக்கு இன்னமும் அனுமதி கிடைக்காதமையை முன்னிட்டு, மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் சட்டப்படி…
மேலும்

நச்சுத்தன்மையற்ற சேதனப்பசளை விவசாயத்தை மேம்படுத்த திட்டம்

Posted by - May 9, 2018
நச்சுத்தன்மையற்ற சேதனப்பசளை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை திருத்தத்திற்கு பின்னர் விவசாய அமைச்சு சமர்ப்பிக்கும் அமைச்சரவை ஆவணத்தில் சேதன பசளை விவசாயத்தை ஊக்குவிப்பதனை இலக்காகக் கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தற்பொழுது இலங்கையில்…
மேலும்

கொழும்பில் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு

Posted by - May 9, 2018
கொலன்னாவ, மீதொட்டமுல்ல, சேதவத்த ,வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக நாளை பிற்பகல் 2.00 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையிலான 10 மணித்தியால காலப்பகுதியில் இந்த நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக தேசிய நீர்விநியோக வடிகாலமைப்பு…
மேலும்

தேசிய கணக்காய்வு சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானது – சபாநாயகர்

Posted by - May 9, 2018
தேசிய கணக்காய்வு சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு அமைவானது என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு முரணானது அல்லவென உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே தாம் வௌியிட்ட அறிவிப்பினால் தவாறான…
மேலும்

மின்சார சபை பொறியிலாளர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்

Posted by - May 9, 2018
மின்சார சபையின் பொறியிலாளர்களுடைய கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். குறித்த கலப்பு உற்பத்தி திட்டத்தை இன்று (09) அமைச்சரவைக்கு தாக்கல் செய்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.…
மேலும்

வவுனியா கூமாங்குளத்தில் பதற்றம்-மர்ம பொருளை தேடும் பொலிஸார்-ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு!

Posted by - May 9, 2018
வவுனியா கூமாங்குளம் நூலக வீதியிலுள்ள சின்னம்மன் கோவிலுக்கு முன்பாகவுள்ள காணியைச் சுற்றி சுற்றுமதில் அமைக்கப்பட்ட காணி ஒன்றில் பெருமளவு வெடி பொருட்கள் காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் நேற்று மாலை 5மணியளவில் வவுனியா நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதியில் அகழ்வுப்பணிகள்…
மேலும்

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து

Posted by - May 9, 2018
கட்டுநாயக்க விமான நிலைய கட்டட தொகுதி ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த  தீ பரவல் காரணமாக விமான போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய தீயணைப்பு பிரிவு மற்றும் விமான படை தீயணைப்பு  பிரிவு இணைந்து…
மேலும்

இளைஞர் ஒருவர் தற்கொலை

Posted by - May 9, 2018
கொழும்பு தொடக்கம் புத்தளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று இரவு சிலாபம் – அளுத்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. புகையிரத ஊழியர்களினால் குறித்த இளைஞரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான…
மேலும்

மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

Posted by - May 9, 2018
நீண்ட கால மின் பிறப்பாக்க திட்டம் தொடர்பான தமது கோரிக்கைகளுக்கு சிறந்த தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது. அத்தியாவசிய சேவைகள் இடையூறின்றி முன்னெடுக்கப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர்…
மேலும்

துமிந்தசில்வாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில் பல குறைபாடுகள்- ஜனாதிபதி சட்டத்தரணி

Posted by - May 9, 2018
சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறும் சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றில் கோரிக்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டபூர்வமானது அல்ல என்று, ஜனாதிபதி சட்டத்தரணி நேற்று (08-05-2018) உயர்நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார்.…
மேலும்