நிலையவள்

வட் வரியை நீக்க தீர்மானம்-மங்கள

Posted by - June 17, 2018
தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரியை அடுத்த வாரம் முதல் நீக்கவுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கும் மக்களுக்கும் வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தது.…
மேலும்

யாழில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Posted by - June 17, 2018
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியிலேயே இச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மரண விசாரணையொன்றுக்காக பொலிஸார் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் மல்லாகம் சந்திக்கு அருகிலுள்ள தேவாலயமொன்றுக்கு அருகில்…
மேலும்

வாகனதண்டப்பணத்தை பிரசே செயலங்களில்….

Posted by - June 17, 2018
மோட்டார் வாகன தவறுகள் தொடர்பிலான தண்டப்பணத்தை பிரதேச செயலகங்களில் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். பிரதேச செயலகங்களில் இதற்கென தனியான பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைவாக இந்த தண்டப்பணத்தை செலுத்துவதற்கான…
மேலும்

தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் நிறைவு

Posted by - June 17, 2018
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்னெடுத்த போராட்டம் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் வழங்கிய உறுதி மொழியை அடுத்து  நிறைவுக்கு வந்ததுள்ளது. மாலை 4 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்திய பேருந்து உரிமையாளர்கள் சாரதிகள்,…
மேலும்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க சுதந்திரக் கட்சி ஆதரவு அளிக்காது-மஹிந்த

Posted by - June 17, 2018
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் சர்ச்சை நிலவுவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே நேற்று (16) அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்தார். மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்…
மேலும்

இலங்கையில் பால்மா விலை உயரும் சாத்­தியம்

Posted by - June 17, 2018
உலக சந்­தையில் பால்­மாவின் விலை அதி­க­ரித்­துள்ள கார­ணத்­தினால் இலங்­கையில் பால்­மாவின் விலையை அதி­க­ரிக்­க­வேண்­டு­மென்று பால்மா உற்­பத்­தி­யா­ளர்கள் நிறு­வனம்,  நுகர்வோர் அதி­கார சபை­யிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. அமெ­ரிக்க டொலரின் விலை 160 ரூபா­வாக அதி­க­ரித்த கார­ணத்­தினால் உலக சந்­தையில் பால்மா விலை அதி­க­ரித்­துள்­ளது.…
மேலும்

இலங்கையில் இருந்து சீனாவிற்கு கடத்தப்பட்ட கடற் குதிரைகள்

Posted by - June 17, 2018
சட்ட விரோதமான முறையில் கடற் குதிரைகளையும் சில மருத்துவ சாடிகளையும் சீனாவிற்கு கொண்டு செல்ல முயன்ற 3 பேரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் 35, 37 மற்றும் 40 வயதுடைய…
மேலும்

மஹிந்த குடும்பத்திற்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நெருக்கடியான சூழ்நிலை-நளின் பண்டார

Posted by - June 17, 2018
கூட்டு எதிர்க்கட்சிக்குள் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஒரு நெருக்கடியான சூழ்நிலை உருவாகி இருப்பதாக அரச நிர்வாகம், முகாமைத்துவ மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். குருணாகலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து…
மேலும்

இலங்கை தமிழரசு கட்சி விரைவில் புனரமைப்பு-சம்பந்தன்

Posted by - June 17, 2018
இலங்கை தமிழரசு கட்சியின் புனரமைப்பு விரைவில் நடைபெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று சனிக்கிழமை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே…
மேலும்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு………..

Posted by - June 17, 2018
நாட்டிலுள்ள பிக்குகள் பலரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய சகோதர ஞாயிறு தேசிய வாரஇதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஞானசார…
மேலும்