நிலையவள்

துப்பாக்கிகள் மூன்றை வைத்திருந்த நபர் கைது

Posted by - June 18, 2018
மொனராகல, மெதகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ருவல்வெல பிரதேசத்தில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெதகம பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 51…
மேலும்

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் பாரிய வாகன நெரிசல்

Posted by - June 18, 2018
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் மருதானை, டீ.ஆர். விஜயவர்தன மாவத்தையில் ஒரு பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள், மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் இந்த…
மேலும்

பொதுஜன பெரமுனவுடன் இணைய 16 பேர் கொண்ட குழு தீர்மானம்- எஸ்.பீ.

Posted by - June 18, 2018
மஹிந்த ராஜபக்ஷ தலைமையை வழங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது. மாத்தளையில் மனச்சாட்சிக்கான சுதந்திரம் எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்  கருத்துத் தெரிவிக்கையில்…
மேலும்

மஹிந்தவின் கூட்டு எதிரணியில் பிளவை ஏற்படுத்துவதே 16 பேரின் நோக்கம்- பிரசன்ன

Posted by - June 18, 2018
அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரும் பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்தும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் கதிரையில் அமர்த்த வேண்டும் என சகல தேர்தல்களிலும் கூட்டு எதிர்க் கட்சி கூறிவந்ததை, கடந்த…
மேலும்

வீதியை மறித்து மக்கள் போராட்டம் ! அதிரடிப்படை குவிப்பு

Posted by - June 17, 2018
சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற சூட்டுச் சம்ப வத்தை தொடர்ந்து காங்கேசன்துறை வீதியில் சகா யமாதா ஆலய சூழலில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இரு வாள்வெட்டு குழுக்களுக்கிடையில் நடைபெற் ற வாள்வெட்டு சம்பவத்தின்போது துப்பாக்கி பிர யோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறும் நிலை…
மேலும்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்

Posted by - June 17, 2018
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது, கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் இன்று கொடிகாமம் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தின்போது, புகையிரதத்தில் பயணித்த கடற்படைச் சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளார்.காயமடைந்த கடற்படைச் சிப்பாய் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், சம்பவம் குறித்து பொலிஸார்…
மேலும்

தகைமை இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம்!

Posted by - June 17, 2018
சரியான தகைமைகளைப் பெறாத மாணவர்களை கொத்தலாவல அரச மருத்து பீடத்துக்கு உள்வாங்க வேண்டாம் என அழுத்தம் கொடுக்கும் வகையில் கொத்தலாவல மருத்துவ பீட விரிவுரையாளர்கள் போதனை நடவடிக்கைகளிலிருந்து விலகியிருப்பதற்கு தீர்மானித்துள்ளனர். மருத்துவ பீடங்களுக்கு அனுமதிப்பதற்கு குறைந்த தகைமையைக் கூட பெறாத மாலபே…
மேலும்

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு விரைவில் சேவைக்கு திரும்பவும் – ரோஹண அபயரத்ன

Posted by - June 17, 2018
தபால் சேவையாளர்கள் அனைவரும் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு விரைவில் சேவைக்கு திரும்புவதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தபால் மா அதிபர் ரோஹண அபயரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவ் அறிக்கையில் மேலும்…
மேலும்

பரீட்சைகளில் எவ்வித காலதாமதமும் ஏற்படாது – கல்வி அமைச்சு

Posted by - June 17, 2018
தபால்சேவை ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இம்மாதம் நடைபெறவிருக்கும் பரீட்சைகளில் எவ்வித காலதாமதமுமின்றி, ஏற்கனவே அறிவித்த திகதிகளில் குறித்த பரீட்சைகள் இடம்பெறும் என  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தபாற்சேவை ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தினால் இம்மாதம் இடம்பெறவுள்ள…
மேலும்

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - June 17, 2018
பொகவந்தலாவ கிலானிதோட்டபகுதியில் சட்டவிரோதமாக  மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று கைது செய்யபட்டுள்ளனர். பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின்போதே இந்து கைது இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது கைது செய்யபட்டவர்களிடம் இருந்து மாணிக்கல்…
மேலும்