நிலையவள்

மஹிந்த மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம்- குமார வெல்கம

Posted by - July 28, 2018
மக்களுக்குப் போன்றே, பாராளுமன்றத்திலுள்ள அரசாங்க எம்.பி.களுக்கும் இந்த அரசாங்கம் வேண்டாமல் போயுள்ளதாகவும் மிக விரையில் அனைவரும் எதிர்க் கட்சித் தரப்புக்குத் தாவி 19 ஆம் திருத்தத்தை மாற்றியமைக்க உதவுவார்கள் என முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் போட்டியிட…
மேலும்

தூக்குத் தண்டனையை கூறியது ஜனாதிபதி, அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம் இல்லை- தலதா

Posted by - July 28, 2018
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதான சிறைக் கைதிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்குவது என இறுதியான தீர்மானமொன்றுக்கு அரசாங்கம் இதுவரை வரவில்லையென நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். மரண…
மேலும்

யாழ் அராலி பகுதியில்குள்ளர்களின் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்

Posted by - July 28, 2018
யாழ் அராலி பகுதியில் மரத்திற்கு மரம் தாவி திரியும் குள்ளர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். குறித்த குள்ளர்கள் மரத்திற்கு மரம் தாவி திரிந்து பெண்கள் , குழந்தைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்துவதுடன் , வீடுகள்…
மேலும்

யாழில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலி

Posted by - July 28, 2018
யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இருவர் பலியாகியுள்ளனர்.யாழ்ப்பாணம் நெடுங்குளம் கொழும்புத்துறைப் பகுதியில் இருவர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்புத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

சாவகச்சேரியில் வாள் வெட்டு தாக்குதல்

Posted by - July 28, 2018
சாவகச்சேரியில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் உள்நுழைந்த வாள் வெட்டு குழுவினர் வர்த்தக நிலைய உரிமையாளரை வாளினால் வெட்டி உள்ளனர். சாவகச்சேரி கைதடி வடக்கில் வர்த்தக நிலையத்தினுள் நேற்று மாலை புகுந்த கும்பல் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது வாள் வெட்டினை மேற்கொண்டு…
மேலும்

இராஜதந்திர விடயத்தை தாண்டி மக்கள் நலனே முக்கியம்-சுவாமிநாதன்

Posted by - July 28, 2018
வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடடம்பெயர்ந்த இலங்கை மக்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தமையானது இராஜதந்திர விவகாரங்களை தாண்டி மக்கள் நலனையே மையப்படுத்தியதாகும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்…
மேலும்

மொரட்டுவயில் பெண் கொலை

Posted by - July 28, 2018
மொரட்டுவ, கொரள்ளவெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 76 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கொலை தொடர்பில் உயிரிழந்த பெண்ணின்…
மேலும்

போலிக் கடவுச்சீட்டுடன் பிரேசில் பிரஜை

Posted by - July 28, 2018
பிரேசில் நாட்டிற்குறிய போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த கடவுச்சீட்டின் ஊடாக மீண்டும் பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்படும் போது விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக…
மேலும்

தற்போதைய அரசாங்கம் நாட்டின் அனைத்து வளங்களையும் வௌிநாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது-நாமல்

Posted by - July 28, 2018
தற்போதைய அரசாங்கம் நாட்டின் அனைத்து வளங்களையும் வௌிநாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். நாட்டின் வளங்களை பாதுகாக்கும் தேவை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே…
மேலும்

போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - July 28, 2018
பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் போதை பொருள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்கஹவெல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 70 போதை மாத்திரைகள்…
மேலும்