அங்குலான பகுதியில் தண்டவாளம் சேதமடைந்தமையின் காரணமாக கொழும்பு நோக்கி பயணிக்கும் அலுவலக புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவன் ஒருவர் நேற்று (07) பிற்பகல் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். உதயநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…
ஒரு தொகை கேரளா கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த மூன்று பேர் வெல்லம்பிட்டிய, சேதவத்தை, களுபாலம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ரஜகிரிய பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகளால் சந்தேகநபர்கள் பரிசோதிக்கப்படும் போது 10 கிலோவும் 200 கிராம் கேரளா கஞ்சா…
மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த உயர்தர மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி அந்த காணொளிகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டுக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடசாலை ஆசிரியர் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி…
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமைப் பதவி தொடர்பில் தனது தீர்மானத்தை இவ்வாரத்துக்குள் அறியத்தருவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று(07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைமைப் பதவி தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சூடான விவாதத்தின் போது சபாநாயகர் இந்த அறிவிப்பை…
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்தின் சமஷ்டி சபை உறுப்பினர், சட்டம் மற்றும் பொலிஸ் அலுவல்கள் தொடர்பான திணைக்களத்தின் அதிகாரி சிமோனெடா சொமாருகா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பு திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சி…
புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. பொல்கஹவெல, பனலிய பகுதியில் இரு புகையிரதங்கள் நேற்று ஒன்றுடன் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதம் மீள திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதனால் தடைப்பட்டிருந்த புகையிரத சேவைகள்…
கலகொட அத்தே ஞானசார தேரரை சத்திரசிகிச்சை ஒன்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு நாளை (08) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு நகரில் காணப்படும் சனசமூக நிலையங்களுக்கு பதிலாக பாரிய அளவிலான சேவை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த புதிய சேவை மத்திய நிலையங்களின் ஊடாக சிரேஷ்ட பிரஜைகள், மாற்றுத் திறனாளிகள், சிறுவர்கள், பெண்கள்,…