நிலையவள்

நீர் தாங்கியினுள் விழுந்து பாடசாலை மாணவி பலி

Posted by - August 9, 2018
தனமல்வில, ஊவா குடா ஓயா பகுதியில் நீர் தாங்கியினுள் விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளது. ஊவா குடா ஓயா பகுதியை சேர்ந்த தனமல்வில ஆரம்ப பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 8 வயதுடைய அமாஷி விந்தீவரி எனும் சிறுமியே…
மேலும்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்கள் மூடப்பட்டன

Posted by - August 9, 2018
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தின் மூன்று பீடங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி மூடுவதற்கு பல்கலைகழக அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமூகவியல் மற்றும் மானுடவியல், முகைாமைத்துவம், பயன்முக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பீடங்களே நேற்று (08) பிற்பகல் முதல் இவ்வாறு…
மேலும்

விஜயகலாவின் வாக்குமூலம் – சட்டமா அதிபரிடம் கையளிப்பு

Posted by - August 9, 2018
முன்னாள் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலம், சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் அவர் ஆற்றியிருந்த சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் பொலிஸ் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலமே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

லிந்துலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - August 9, 2018
வட்டவளை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெசிபன் தோட்டத் தொழிலாளர்கள் 160ற்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை 11 மணிக்கு தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தோட்ட உதவி அதிகாரி தொழிலாளர்களை தகாதவார்த்தைகளால்…
மேலும்

இன்று பிற்பகல் சில ரயில்கள் சேவையில்

Posted by - August 9, 2018
இன்று பிற்பகல் சில ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ஓய்வுபெற்ற ரயில் சாரதிகள் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு குறித்த ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளன. முன் அறிவிப்பின்றி உடனடியாக இடம்பெறும் ரயில்வே தொழில் சங்க நடவடிக்கை இதுவாகும் என ரயில்வே உதவி வர்த்தக அத்தியட்சகர்…
மேலும்

தொழிற்சங்க பயங்கரவாதத்தை தோற்கடிக்க காலம் வந்துள்ளது- சாகல

Posted by - August 9, 2018
தொழிற்சங்க பயங்கரவாதத்தை தோற்கடிக்க காலம் வந்துள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இதனை குறிப்பிட்டுள்ளார். முழு நாடும் சேர்ந்து நாட்டை 30 வருடங்களாக அழிவுக்கு இட்டுச்சென்ற பிரிவினைவாத பயங்கரவாதத்தை தோற்கடித்தது…
மேலும்

உத­ய­சூ­ரி­யனின் மறைவு பேரி­ழப்பு – சம்பந்தன்

Posted by - August 9, 2018
உலக தமி­ழர்­களின் உதயசூரி­ய­னாக இருந்து ஒளியூட்­டிய கலை­ஞரின் மறைவு ஈடு­செய்ய முடி­யாத பேரி­ழப்­பாகும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அனு­தாபம் தெரி­வித்­துள்ளார். கலைஞர் கரு­ணா­நி­தியின் மறை­வுக்கு அனு­தாபம் தெரி­வித்து அவர் விடுத்­துள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு…
மேலும்

மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி

Posted by - August 9, 2018
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு வடமாகாணசபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது சபையில், உறுப்பினர்கள் எழுந்து நின்று மறைந்த தமிழக முன்னாள்…
மேலும்

நகரசபை உப தலைவர் கைது

Posted by - August 9, 2018
தலவாக்கலை லிந்துல நகரசபையின் உப தலைவர் லெட்சுமன் பாரதிதாசன் சற்று முன் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இருக்கும் சென் கிளயார் தோட்டத்திற்கு சொந்தமான காணியை பலாத்காரமாக பிரிக்க சென்றமையினால் (உரிமை கொண்டாட) தலவாக்கலை…
மேலும்

வடகொரியாவில் இருந்து ஆடை இறக்குமதி செய்ததாக கூறப்படும் செய்தி பொய்யானது

Posted by - August 9, 2018
வடகொரியாவில் இருந்து இலங்கை ஆடை இறக்குமதி செய்ததாக கூறப்படும் செய்தி பொய்யானது என்று இலங்கை வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. அந்த அமைச்சு வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, அக்டோபர் 2017 மற்றும் மார்ச்…
மேலும்