நிலையவள்

ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - August 21, 2018
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரையும் எதிர்வரும் செப்டம்பர் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான்…
மேலும்

மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்கிறது

Posted by - August 21, 2018
மன்னார் சதொச வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொண்ட சமயத்தில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 54 வது தடவையாகவும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. கடந்த 10 ஆம்…
மேலும்

லிந்துல நகர சபையின் உப தலைவர் கைது

Posted by - August 21, 2018
தலவாக்கலை – லிந்துல  நகர சபையின் உப தலைவர் எல்.பாரதிதாசன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்க்ளேர் தோட்டத்தில் 4 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சித்ததார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பாரதிதாசன் கைது செய்யப்பட்டள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
மேலும்

கூட்டு எதிர் கட்சி ஒரு வேட்பாளரை கூட தெரிவு செய்து கொள்ள முடியாத நிலையில் – அஜித்

Posted by - August 21, 2018
ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிட முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்காது தற்போது தோல்விக் கண்டுள்ள நிலையில் அந்த இலக்கை அடைவதற்கு மஹிந்த ராஜபக்ஷ முயற்சிக்கின்றார் என தெரிவித்த மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி  இராஜாங்க அமைச்சர்…
மேலும்

ரவிகரன் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted by - August 21, 2018
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை  தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த…
மேலும்

மஹிந்தவின் சகோதரர் காலமானார்

Posted by - August 21, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் சந்தர ராஜபக்ஷ காலமானார்.கடந்த ஆறு மாத காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர், தங்காலை வைத்தியசாலையில்   சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.
மேலும்

கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது

Posted by - August 21, 2018
தலவாக்கலை பகுதியில் 13,850 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றி வளைப்பினை மேற்கொண்ட அதிகாரிகள் குறித்த நபர்களால் இரகசியமான…
மேலும்

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியம் ஏற்பட்டுள்ளது!-சுரேஷ்

Posted by - August 21, 2018
தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமையொன்றின் அவசியத்தை முன்னிறுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில். குறித்து விடயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.…
மேலும்

திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் 08 பேர் கைது

Posted by - August 21, 2018
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் 08 பேர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 30 மற்றும் 45 வயதுகளுக்கு இடைப்பட்ட வெலிக்கந்த, கதிர்காமம் மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை கண்டி,…
மேலும்

முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் பிணை மனு நிராகரிப்பு

Posted by - August 21, 2018
02 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இறக்குமதி ஏற்றுமதி திணைக்களத்தின் முன்னாள் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் காமினி மககமகே தாக்கல் செய்திருந்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று…
மேலும்