நிலையவள்

கூட்டு எதிர்க் கட்சியில் கோட்டாவைக் கொலை செய்ய சதி செய்யவில்லை- வெல்கம

Posted by - September 25, 2018
ஜனாதிபதியையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் கொலை செய்ய கூட்டு எதிர்க் கட்சியினர் சதி செய்யவில்லையெனவும், அவ்வாறு செய்யக்கூடிய யாரும் கூட்டு எதிர்க் கட்சியில் இல்லையெனவும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம  தெரிவித்துள்ளார். நான் குடும்ப அரசியலை விரும்பவில்லை. ராஜபக்ஷ ஒருவர் ஜனாதிபதி தேர்தலில்…
மேலும்

நியோமல் ரங்கஜீவ பிணையில் விடுதலை

Posted by - September 25, 2018
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட…
மேலும்

பணிக்கு செல்லாத வைத்தியர்களுக்கு சம்பளம் இல்லை –ராஜித

Posted by - September 25, 2018
இடமாற்றம் வழங்கப்பட்டு புதிய இடங்களில் பணிக்கு செல்லாத வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களுக்குறிய சம்பளத்தை இடைநிறுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதாரச் செயலாளர் பீ.ஜீ.எஸ். குணதிலகவிற்கு இந்த விடயத்தினை அறுவுறித்தியுள்ளார்.…
மேலும்

கிரிக்கெட் விளையாட்டை அழித்தது இந்த அரசாங்கமேதான்-அர்ஜுன ரணதுங்க

Posted by - September 24, 2018
நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை அழித்தது இந்த அரசாங்கமேதான் எனவும், இதற்கு தயாசிறி எனும் நபர் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும் பெற்றோலிய வளத்துறை அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த தயாசிறிதான் கிரிக்கெட் விளையாட்டுக்குள்…
மேலும்

இன்றிரவு நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ. மழை-

Posted by - September 24, 2018
நாட்டின் பல பாகங்களில் இன்று (24) இரவு இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வட மத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய பிரதேசங்களுக்கு 100 மி.மீ. மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நாளை (24) யும்…
மேலும்

காணாமல்போனோர் அலுவலகம் சமர்ப்பித்த பரிந்துரைகள் விரைவில் நிறைவேற்றப்படும்-சாலிய பீரிஸ்

Posted by - September 24, 2018
காணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தோம். அப்பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவினால் காணாமல் போனோர் அலுவலகம் சமர்ப்பித்த பரிந்துரைகள் விரைவாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கின்றோம் என காணாமல் போனோர்…
மேலும்

போராட்டத்தினால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது – தலதா

Posted by - September 24, 2018
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள  தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தற்போது  வழக்கு தாக்கல் செய்யப்பபட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பின் நிமித்தமே  இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களே தவிர உண்ணாவிரதமிருக்கும் போராட்டத்தின் மூலம் அல்ல  என சிறைச்சாலை புனரமைப்பு மற்றும் நீதியமைச்சர் தலதா…
மேலும்

வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - September 24, 2018
வவுனியாவில் இன்று நண்பகல் மத்திய நிலையத்தில் 4 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற தனியார்…
மேலும்

சமமாக கருதி பொதுமன்னிப்பு வழங்கும் பிரேரணையை ஜனாதிபதி முன்வைத்தால், அதனை முற்றாக எதிர்ப்போம் -எம்.ஏ.சுமந்திரன்

Posted by - September 24, 2018
அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களையும் சமமாக கருதி பொதுமன்னிப்பு வழங்கும் பிரேரணையை ஜனாதிபதி முன்வைத்தால், அதனை முற்றாக எதிர்ப்போம் என ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.…
மேலும்

நீரில் மூழ்கி சிறுவன் பலி

Posted by - September 24, 2018
கலஹ – குறுகல் ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போய் இருந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான். குறித்த சிறுவன்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 1.30 மணியளவில் குறுகல்ஓயாவில் நீராட சென்றிருந்த நிலையில் நீரில்…
மேலும்