விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப்போவதில்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி விற்பனை தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பருப்பு, சீனி உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களிற்கான வற் வரியினைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தச் சலுகை தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கூடாக வழங்கப்படுமெனவும், இது தொடர்பில் நாளை அமைச்சரவையில் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரசாங்கத்துக்கெதிராக கூட்டு எதிர்க் கட்சியினரால், எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாதயாத்திரை தொடர்பாக சிறீலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இரகசியக் கூட்டமொன்றை நடாத்தியுள்ளார்.
தனது மகன் நாமல் ராஜபக்ஷவுக்குச் சார்பாக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ தான் முன்னிலையாகப்போவதில்லையென முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்திய இழுவை படகு மீன்பிடியினைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கு முன்பாக இன்றைய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குற்பட்ட நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் ஒன்றை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.