பொன்நிறத்தில் வறுக்கப்படும் உணவு வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு இழைப்பதில்லை. அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சீனாவில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தகர்க்கப்பட்டது. 10 வினாடிகளில் 19 அடிக்குமாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்ட மாயின.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் நடந்த மாணவர்கள் போராட்டம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் பல இடங்களில் வன்முறை தலைதூக்கிய போதிலும் புதுவையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
தேசிய கீதம் பாடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று பாஜக எம்.பி. தருண்விஜய் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்துள்ளதால், விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.