ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்னதாகத் தமிழ் அரசியல் தலைவர்கள் சொத்து சேர்ப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்த போதும் போராட்டத்தின் பங்காளர்களான மக்கள் வறுமையில் வாடுவது சொல்லித் தெரியவேண்டியதொன்றல்ல.
மக்களின் நன்மை கருதி அரிசிக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு கிலோகிராம் அரிசியினை 66 ரூபாவிற்கு விற்பனை செய்யலாம் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொலை முயற்சி தொடர்பில் யார் யார்? கைது செய்யப்பட்டார்கள், என்ன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று(3) முதல் அமுல்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 69ஆவது சுதந்திர தினம் நாளை (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.
காணாமல்போனவர்கள் குறித்து பொறுப்புகூற வேண்டிய கடப்பாடு, தற்போதைய அரசாங்கத்துக்கு இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐந்து அம்சக்கோரிக்கையினை முன்வைத்து சுதந்திர தினமான நாளை சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப்பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.