தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்டும் ஆந்திரா-கேரளாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று தீபா தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பெயரை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான வேலைத்திட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.
கொழும்பு நகரத்தை முறையாக தூய்மையான நகராக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தை தெரிவு செய்து நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கையை சிதைக்க எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கில் 80 வருடங்களுக்கு மேலாக வாழும் சிங்கள மக்களுடன் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெற்கில் இருந்து அழைத்து வரப்பட்டு தமிழ் மக்களின் காணிகளில் சிங்களவர்களை குடியேற்றுவதே பிரச்சினையானது எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.