சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம் நிறைவேறியதை ரத்து செய்யவேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்தியாவுக்கும் சிறீலங்காவுக்குமிடையில் பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான இறுதிக்கட்ட வேலைகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறீலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான, சிறப்பு அதிரடிப்படையையும், சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தையும், பலப்படுத்துவதற்கான நவீன கருவிகளை ஜப்பான் கொடையாக வழங்கவுள்ளது.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) ஆவணத்தின் பிரகாரம், ‘யாழ்ப்பாணத்தை’ கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு கட்டளையிட்ட போதும் சிறிலங்கா இராணுவத்தினர் இரண்டு தடவைகள் தனது கட்டளையை நிராகரித்ததன் காரணமாக இந்தியாவின் தலையீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதாக 1988 பெப்ரவரியில்…
தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சட்டவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் நிறுவனம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட காருடன் தலைமறைவான நபர் புறக்கோட்டை – ரஜமாவத்தை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.